
மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வைத் துத் தகர்த்தனர். மேலும், 3 நாள்களுக்கு முன்னதாக கிராமத்தலைவரின் மகனை உயிருடன் கொளுத்தினர் என்று அதிகாரிகள் வட் டாரம் தெரிவித்தது.
50க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் நிலிகுடா கிராமத்தில் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பஞ்சாயத்து அலுவலகத்தை வெடிவைத்துத் தகர்த்தனர். இக்குண்டு வெடிப்பினால் இரண்டு மாடிக் கட்டடமான பஞ்சாயத்துக்கட்டடம் பலத்த சேதமடைந்தது. முன்ன தாக, ஞாயிற்றுக்கிழமையன்று, கிராமத்தலைவரின் மகனைப் பலமாகத் தாக்கிய மாவோயிஸ்ட்டுகள், அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவரின் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாகப் புகார் அளிக்க வில்லை. அலுவலர் களுக்கு 3 நாட்கள் கழிந்த பின்னரே தெரிந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment