Saturday, May 2, 2009

உருப்படாத மகஇக

தேசம் தீப்பற்றி எரிகிற போது நான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கொண்டுதான் தீயை அணைப்பேன் என்று அடம்பிடிக்க நாம் என்ன 68 ஆம் ஆண்டுகளின் நக்சல்பாரிகளா?

மார்க்சிஸ்ட்டுகளை  அடிக்காத கட்சி ஏதாவது இந்தியாவில் உண்டா காங்கிரஸ் துவங்கி நக்சல்பாரி வரை எல்லாக்கட்சிகளும் நம் ஊழியர்கலைக் கொலை செய்துள்ளன.தாக்கியுள்ளன.

பீகாரில் நக்சல்பாரிகளுடன் கூட்டணி அமைத்து சிபிஐ,சிபிஎம் போட்டியிடுகின்றன.வங்கத்தில் அவர்கல் செய்துவரும் அட்டூழியங்களையும் நந்திகிராம் என்னும் ஊரில் நிலம் எடுக்கும் திட்டமே இல்லை என அரசு அறிவித்த பிறகு நில மீட்பு இயக்கத்தை மம்தா தலைமையில் நக்சலைட்டுகள் துவக்கி சகல பாவங்களையும் செய்தார்கள்.அதற்காக பீகாரில் அவர்களோடு நாம் கூட்டணி சேர்வதை தவிர்க்கவில்ல்லையே?

யாரோடு சேர்ந்து அரசியல் போராட்டம் நடத்துவது என்பதை மாறிக்கொண்டே இருக்கும் தேச நிலைமையும் மாறிக்கொண்டே இருக்கும் முதலாளித்துவக்கட்சிகளின் நிலை பாடுகளும் நம் சொந்த பலமும்தான் தீர்மானிக்கின்றன.

தொழிலாளி வர்க்க நலனுக்கு அதிகபட்சம் உகந்தது எது என்று பார்த்து அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுப்பதுதான் சரி.

உணர்ச்சிவசப்பட்டு எந்நேரமும் டென்சனாக அலைவது நம் பாதை அல்ல.அது 68இல் பிரிந்துபோனவர்களின்பாதை.

ஒரிஸ்ஸாவில் நக்சல்பாரிகள் ஒரு அயோக்கிய இந்துத்வ் சாமியாரைப் போட்டுத்தள்ளினார்கள்.விளைவு? பல்லாயிரம் கிறித்துவ மக்கள் தாக்கப்பட்டார்கள்.பெண்கல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.கொலை செய்த நக்சலைட்டுகள் ஆரெஸெஸ்காரன் இதைச்சாக்கிட்டு சிறுபான்மை மக்களைத் தாக்குவான் என்கிற நிலைபாட்டில் யோசிக்கவில்லை.அல்லது அப்படித்தாக்குதல் வந்தால் அதிலிருந்து மக்களைக் காக்கிற வலு நமக்கு இருக்கிறதா என்கிற கணிப்பும் நக்சல்களுக்கு இல்லை.உணர்ச்சிவயப்பட்ட கொலை இன்று எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களுக்கு வினையாக முடிந்துவிட்டது.

தாக்கினால் திருப்பித்தாக்கும் வலுவும் மனநிலையும் நமக்கும் உண்டு.பல இடங்களில் செய்தும் இருக்கிறோம்.ஆனால் அதையும் பொதுவிதியாக நாம் வைக்க முடியாது.சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

சொந்தக்காலில் நிற்கும் வளர்ச்சியை எட்டும்வரை நாம் நிலைமைக்கேற்ப மக்கள் நலன் காக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.