Monday, January 5, 2009

மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !

விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது

கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான்  வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும்

. இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.

மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி  செய்ய வேண்டும்.

 அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.

இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன.

அந்த கட்சியை  சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.

இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்

படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்!

  பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.

உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

ஏ.....! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!

பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!

அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்? 

மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு "முன்னேற" உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!

எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்...

உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!

பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்.....சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!

அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லது!


ஆதிசிவம், சென்னை. www.beyouths.co.cc

3 comments:

Che Kaliraj said...

தற்போதுதான் நான் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் எழுதிய புத்தகங்களை வாசித்து வருகிறேன், தங்கள் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது


" உலகதொழிலாளிகளே ஒன்று கூடுங்கள் " என்பது தானே முதல் தத்துவம். நீங்கள் கூறுவது வியப்பாக உள்ளது. நாம் இப்போது தான் இது போன்ற கம்யுனிச வலைப்பூக்களை படித்துவருகிறேன் . நீங்கள் அவர்களை குறை கூறுவதையும் அவர்கள் உங்களைபோன்றோரை குறை கூறுவதையே அதிகம் கண்ணுக்கு தெரிகிறது, ஏன் நீங்கள் இணையக்கூடாது? நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆதலால் தங்களுடைய கொள்கை , அவர்கள் கொள்கை நான் அறிந்தவன் அல்ல. கம்யுனிசத்தில் இத்தனை பிளவா?

சந்திப்பு said...

அன்புள்ள தோழர் சே கலைராஜ்-க்கு வணக்கங்கள்.

தாங்கள் தற்போது கம்யூனிச இலக்கியங்களை கற்க ஆரம்பித்துள்ளதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள்? எதையும் சந்தேகி என்பது மார்க்சுக்கு பிடித்த ஒரு மேற்கோள். நடைமுறையும் - தத்துவமும் பிரிக்க முடியாத ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அடுத்து உங்களது நல்ல எண்ணம்: அதாவது ஒருவருக்கு ஒருவர் திட்டிக் கொள்வதைத்தான் நான் இணையத்தில் காண்கிறேன். இதைத் தவிர்த்து இருவரும் இணையலாமே என்று கூறியிருக்கிறீர்கள்? உங்களது கருத்தை முழுமையாக மதிக்கிறேன்.

உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் பல்வேறு பிரிவுகளாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நினைவு கூர்வது நல்லது. குறிப்பாக லெனின் காலத்திலேயே கூட அங்கு தீவிரமாக செயல்பட்ட நரேத்னிக்குகளுக்கு எதிராகவும் - பின்னர் மென்ஸ்விக்குகளுக்கு எதிராகவும் - பின்னர் டிராட்ஸ்கியவாதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். இதுபோலத்தான் உலகின் பல நாடுகளிலும் பல்வேறு அமைப்புகளாக கம்யூனிஸ்ட்டுகள் செயலாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் இன்றைக்கு கம்யுனிச அமைப்பில் பிரதானமான கட்சியாக இருப்பது சி.பி.ஐ.(எம்) மட்டுமே அடுத்து சி.பி.ஐ. செயல்படுகிறது. அதற்கடுத்து நக்சலிச அமைப்புக்கள் பல்வேறு குழுக்களாக சிதறுண்டு செயல்பட்டு வருகிறது. இது ஏறக்குறைய அணுச் சிதைவுபோல ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும..... இப்படியே பிளவு பட்டுக் கொண்டே இருக்கும். இங்குதான் பிரச்சனை. அதாவது ஒரு நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளை ஆய்வு செய்து, அந்த அதற்கேற்ப தங்களது திட்டத்தை வடிவமைத்துக் கொண்டு செயலாற்றுவதுதான் கம்யுனிசத்தின் அடிப்படை.

இதில் சரியான கொள்கையுடன் - தத்துவார்த்த புரிதலுடன் - ஐக்கிய முன்னணி அமைத்துக் கொண்டு செயல்படும் அமைப்புகள் களத்தில் வெல்லும். அது புரட்சியை நோக்கி பயணிக்கும். ஆனால் சில அமைப்புகள் நான் கம்யுனிசம் பேசுகிறேன் பேர் வழி என்று கூறிக்கொண்டே எதிர் புரட்சி சக்திகளாக - கம்யுனிச எதிர்ப்பு அமைப்புகளாக செயல்படும். இவைகள் என்.ஜீ.ஓ. வகையினர். இந்தப் பிரிவில்தான் வருகிறது ம.க.இ.க. போன்ற தொடை நடுங்கி நக்சலிச அமைப்பு. இவர்கள் தங்களது கட்சிப் பெயரை வெளியில் சொல்லுவதற்கு கூட நடுங்குவார்கள். இதுதான் வித்தியாசம்! எனவே இயல்பாகவே களத்தில் எழக்கூடிய அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சி.பி.எம்.யைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக இதுபோன்ற அமைப்புகளை விமர்சிப்பது இல்லை. ஆனால் இந்த என்.ஜீ.ஓ. குழுக்கள் தங்களது செயல்திட்டமாகவே இதனை வைத்துக் கொண்டுள்ளனர். இதுதான் வித்தியாசம் தோழரே! மற்றபடி... ஒருவர் தீவிரமாக ஒரு கருத்தை பேசுகிறார் என்பதாலலே அவர் பெரிய புரட்சியாளராக மாறி விட முடியாது. அதை அவர் நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை வைத்தும் - அவரது இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தகைய தந்திரங்களை கையாள்கிறார் என்பதைப் பொறுத்தும்தான் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விழைகிறேன். நன்றி தோழரே!

Sempulam said...

//நீங்கள் அவர்களை குறை கூறுவதையும் அவர்கள் உங்களைபோன்றோரை குறை கூறுவதையே அதிகம் கண்ணுக்கு தெரிகிறது, ஏன் நீங்கள் இணையக்கூடாது? //

என்ன செய்வது சே வருத்தமாகத்தான் இருக்கிறது...

இந்த பதிவில் அரசியல்வாதிகளை எதிர்த்து பேசுங்கள் என எழுதியிருக்கிறார்கள் ஆனால் இவர்கள் அவர்களுடனேயே கூட்டனி வைக்கிறார்கள் அது ஏன் என்று புரியவில்லை...

மக இக யாருடன் கூட்டனி வைத்துள்ளது என்பதை அறிந்தால் நாம் அவர்களையும் விமர்சிக்கலாம்
ஆனால் அவர்கள் தேர்தலிலேயே நிற்பதில்லையாமே?

அப்போ இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதுதான் வேறுபாடா?

என்னைப்பொருத்த வரை ஜெயல்லிதாவுடன் கூட்டனி வைப்பவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள்.
அது எந்த இலக்கை நோக்கி இட்டுச்செல்லும் என்பது அனைவருக்கும் தெறியும்