Tuesday, January 6, 2009

தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.)

தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். 

எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.

இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். 
(பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.

உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.

அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.

இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!

அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!

இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை.

சந்திப்பு 

3 comments:

விடுதலை said...

மகஇக என்.ஜி.ஓவா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு பாட்டு உண்டு.

திருத்தம்:
“…இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”

,,மகஇக = குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்

திருத்தம்:
முக்கியானத வுட்டேன்.
மகஇக = பார்ப்பனீயம் + குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்

Anonymous said...

Govind said...
No one in India has eligible to criticise CPM. They were ruling West Bengal for the past 31 years and they may rule another 20 years without any difficulty. The reason is very simple. They have done many good things to the people and people choose them again and again and again…….Who ever bark on CPM will go to bed for taking rest, so that they can bark again at different place for getting Bun and Biscuit.

They were not made money like M.Karunanidhi and Co.,.
They never developed family politics.
They were not corrupted like Cong or BJP
They were not pushed down any Govt for getting posts
They were not mixed Religion with Politics….

What else you are looking more? More than that they were not like TMES,, just barking…..

Unknown said...

ம க இ க ஒரு வெண்ணை வெட்டி சிப்பாய்களின் கூட்டம் .
ஆள் பிடிப்பதற்கு சி பி எம் ,சி பி ஐ - கட்சிகளை சாடுவது, விடிய விடிய போஸ்டர் ஓட்டுவது , விடிந்தால் கானாமல் போவது இது தான் இவர்கள் வேலை . வேறு யார் போராடினாலும் அவர்கள் போலிகள் .
இவர்கள் பைத்தியம் பிடிக்க செய்த பல இளைஞர்களை கண்டுள்ளேன் .
வர்க்கம், முதலாளித்துவம் , எல்லாம் கற்றுக்கொடுத்து ஒருவனை ஊருவாக்கும் போது அவனை தட்டி செல்வது இந்த வெண்ணை வெட்டிகளின் போதுயுக்தி .