Sunday, January 24, 2010

செல்வபெருமாளுக்கு செவ்வணக்கம்கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணினி ஊழியராக பணியாற்றி வந்த தோழர் செல்வபெருமாள் இளம் வயதிலேயே (40) நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது துயரமிக்கது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பல இயக்கங் களில் கலந்து கொண்டார். திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் மதநல்லிணக்கத்தை உருவாக்கிட பாடுபட் டவர். தான் வாழ்ந்த பகுதியில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளை கட்டிட முனைப் பாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினரானார். கிளைச் செயலாள ராக சில ஆண்டுகள் பணியாற்றி திருவொற் றியூர் இடைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணி ஆற்றி வந்தார். கட்சியின் அழைப்பை ஏற்று கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக தீக்கதிர் சென்னைப் பதிப்பில் சேர்ந்தார். அங்கு அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார்.

கட்சியின் மாநில மையத்திற்கு அனுபவம் வாய்ந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவைப் பட்ட போது, செல்வப்பெருமாளை அழைத் தது. கட்சி முடிவு தான் என்னுடைய முடிவு என இன்முகத்துடன் ஏற்று மாநில மையத் திற்கு வந்து கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக கடந்த பத்தாண்டு காலமாக பணியாற்றி வந்தார்.

அவர் கட்சியின் மாநிலக்குழு அலுவ லகக் கிளையில் உறுப்பினராக இருந்தார். அவர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மட்டுமல்ல; அரசியல் ஆர்வமும், தத்துவ ஞானமும் உள்ள

ஒரு முழுநேர ஊழியராக பரிணமித்தார்.

ஒரு நிலையில் மீண்டும் களப்பணிக்குச் செல்ல வேண்டிய ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அலுவலகத் தேவையை கூறியபோது அதை ஏற்று மாநிலக்குழு அலுவலகத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி செய்கிறபோது, இடையிடையே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி பல நூல்களை படிப்பார்.

கட்சி அலுவலகத்தில் உள்ள நூலகம் மட்டுமல்லாமல், பொது நூலகத்திலிருந்தும் நூல்கள் எடுத்துப் படித்து வருவார்.

கட்சியின் தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்ட் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதி னார். மார்க்சிஸ்ட் மாத இதழை மாதந் தோறும் கணினியில் வடிவமைத்து அச்சுக்கு அனுப்பும் பணியை ஆர்வத்தோடு செய்து வந்தார். `மே தின வரலாறு’ என்று அவர் எழு திய சிறுபிரசுரத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

மேலும், சிங்காரவேலர் எழுதிய கட்டுரை களைத் தேர்வு செய்து தொகுத்தளித்து “என்ன செய்ய வேண் டும்?” என்ற தலைப் பில் அவரது முன்னு ரையோடு புத்தகாலயம் வெளியிட்டது.

நமது கட்சியின் நிலைபாட்டை, நடை முறைக் கொள்கையை யாராவது விமர் சித்தாலோ, தாக்கினாலோ அல்லது கட்சியை அவதூறு செய்தாலோ அதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்று துடிப்பார். இதற்காக அவர் சந்திப்பு என்ற வலைப்பக்கத்தை உருவாக்கினார். அதில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியிட்டு வந் தார். அதில் ஓரிரு கட்டுரைகள் குறித்து மிரட் டல் வந்தபோது கூட, அதற்கெல்லாம் அஞ்சு பவன் நானல்ல என்று பதிலளித்தார்.

12-4-2009 அன்று திருவொற்றியூரில் எஸ்சி/எஸ்டி சமூக சேவகர் மையம் என்ற தொண்டு அமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு ‘சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றி னார். தன்னுடைய உரையில் தீண்டாமை ஒழிப்பு பற்றியும், தலித் குழந்தைகள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தையும் வலி யுறுத்தி பேசினார். அதை மையமாக வைத்து, தான் உருவாக்கிய வலைப்பக் கத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார். “தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் கிராமத்தில் படித்தாலே ஆதிக்க சாதியி னருக்கு பிடிக்காது என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல் வியைத் தொடர நினைப்பவர்களுக்கு, ஆரோக்கியமான ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப் பானோ அது போன்று குறைந்தபட்ச வசதி களை இந்த அரசால் ஏற்படுத்த முடியாதா?” என்பதே எனது கேள்வி.அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியா வசியமாகிறது. திருப்பதி வெங்கடாசலப் பெருமாளுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் வாரி வாரி வழங்கப்படும் பக்தர்களின் காணிக்கைகள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமேயொழிய வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருள் உதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே” என தலித் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அனைவரும் உதவிட வேண்டும் என தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்தி இருக் கிறார்.

தோழர் செல்வபெருமாள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிக் கொண்டே, அரசியல் பணியையும், அர்ப் பணிப்போடு செய்து வந்தார். கடந்த மே மாதம் இடையில் உடல் நலம் பாதித்து, சிகிச்சைக்காகச் சென்றவர் மீண்டும் அலுவலகத்திற்கு வர இயலாமலே போய்விட்டது. அவரை பாதித்த அந்தக் கடுமையான புற்று நோயிலிருந்து அவரை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் 22-01-2010 இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரோடு கட்சி அலுவல கத்தில் சேர்ந்து பணியாற்றிய மாநிலத் தலை வர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் சனிக்கிழமையன்று காலையில் கூடி கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத் தினர்.

அவர் பிறந்து வளர்ந்து, கட்சிப் பணி யாற்றிய திருவொற்றியூர் நகரத்தில் கட்சித் தலைவர்களும், தோழர்களும் இறுதி அஞ் சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம். அவரைப் பிரிந்து வாடும் துணைவியாருக்கும், 3 பெண் குழந்தைக ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.