Tuesday, December 30, 2008

வினவு - வினை செய்! மாமா வேலை செய்வோருக்கு எதிராய்!

.... - மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு தோல்வி கண்ட நிலையில், தற்போது கணிணித் திரையின் மூலம் மாய வலையை வீசி வருகிறது. அதாவது தற்போது இணையத்தின் மூலமே புரட்சியை நடத்தி விடலாம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டது. மேலும் ....-வின் உண்மை முகம் என்ன என்று நமது வாசகர்களுக்கு தெரியாதல்லவா? அதனால் அது தன் அமெரிக்க மறைமுக எசமான் இட்ட கட்டளைகளை தற்போது நன்கு நிறைவேற்றி வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு செல்வதற்கு முன் அதன் உண்மை முகத்தை கிழித்து அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதாவது .... என்கிற அமைப்பு ஏதோ பெரிய புரட்சிகர அமைப்பு போல பண்ணையார் அரசியல் செய்து வருகிறது. அதாவது பண்ணையார் வைத்ததே சட்டம். அதனை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்கிற நிலப்பிரபுத்துவ - ஏகாதிபத்திய மனோபாவம் வெளிப்படுத்துவதை இணையவாசிகள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.

சரி, ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அடிப்படை ஒரு புரட்சிகர கட்சி! தன்னை ஒரு புரட்சிகர அமைப்பு என்று கூறிக் கொள்ளும் .... என்கிற ஒரு கலை அமைப்பு பிரதானப்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு எது என்று யாராவது கேட்டால், இது உளவுத்துறை கேட்கும் கேள்வி! என்று ஒரே வரியில் முடித்துக் கொள்வார்கள்.

உண்மையில் இந்த அமைப்பின் பின் இயங்கும் அரசியல் சக்தி - .... மறைமுகத் தலைமை CPI-ML [SOC] என்பதே. இன்றைய நவீன ஜனநயாக உலகில் - தங்களை நக்சலைட்டுகள் என்று பகிரங்கமாக கூறிக் கொள்ளும் .... அதன் கட்சிப் பெயரை மட்டும் வெளியில் சொல்லவே சொல்லாதாம். உண்மை இங்குதான் இருக்கிறது. தன்னுடைய கட்சி இது என்று கூறிவிட்டால் அப்புறம் வரக்கூடிய இடிகளை யார் தாங்குவது என்கிற அவநம்பிக்கையான அரசியல்தான் காரணம்.

சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் மார்க்சும், எங்கெல்சும் 1847 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

அதாவது கம்யூனிஸ்ட்டுகள் தங்களது நோக்கம் இதுதான் என்று உலகறிய பறைசாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த ஏகாதிபத்திய தரகர்கள் இந்தியாவில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டு அரசியல் நடத்துகிறார்களாம்! இதைவிட கோமாளித்தனமானது எதாவது இருக்க முடியுமா?

சரி, ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் அடிப்படை அம்சைமே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு.

அதாவது அந்த அமைப்பின் கிளைகள் முறையாக கூட வேண்டும். குறிப்பாக கட்சி மேலிருந்து கட்டப்படுவது. அந்த அமைப்புக்கான மாநாடுகள் திட்டமிட்ட கால அளவில் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஆவணங்களை இறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகளை மேற்கண்ட அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்..சி. குழு எப்படி மேற்கொள்கிறது! பரலோகத்திலா? அல்லது இணையத்தின் மூலமே ஏதாவது சாட்டிங் கான்பிரன்ஸ் மூலம் நடத்துகிறீர்களா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே!

நேபாளத்தில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள நேபாள மாவோயிஸ்ட்டுகள் கூட தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள். அத்துடன் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்?

அது மட்டுமா? இந்தியாவில் உள்ள பல நக்சல் அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துகிறார்கள். (இதில் எனக்கு வித்தியாசம் உண்டு அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை.)

ஆனால், தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் .... - எஸ்..சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்.

மேலும், தற்போது ....வில் செயல்படும் யாருக்கும் சொந்தப் பெயர் கிடையாது! போலிகள்தான். அனானிகள்தான். அது மட்டுமா இணையத்தில் கூட அனானியாக பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புரட்சிகர மாமா வேலை பார்ப்பதுதான் இவர்கள் வேலை.

அது மட்டுமல்ல; ஒரே ஒரு .... ஆட்களாவது தாங்கள் குடி இருக்கும் இடத்தில் செயல்படுகிறார்களா? என்றால் இருக்கவே இருக்காது. அப்புறம் சாயம் வெளுத்து விடுமே! அதனால்தான் சி.பி.எம். செயல்படற இடமா பார்த்து பிரச்சாரம் செய்வது - பிரச்சனை செய்வது என்பது இவர்களின் தொடர் கதையாகிப் போயுள்ளது. வீண் வம்புக்கு இழுப்பது இவர்கள்தான் எல்லா இடத்திலும். சி.பி.எம். கூட்டம் போட்டால் அங்கே இவர்களது புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது சீர்குலைவு அரசியலின் உச்சகட்ட சீரழிவே .... - எஸ்..சி. கும்பலின் சீரழிந்த அரசியல்.
இவர்களது வர்க்க எதிரி யார் என்று கேட்டால் இன்று வரைக்கும் தெரியாது? ஏனென்றால் இவர்களிடம் கட்சித் திட்டமே கிடையாதே! அதனால்தான் தற்போது இவர்கள் "இந்தியா மறுகாலனியாவதை எதிர்க்கிறார்களாம்". அது சரி உங்கள் அமைப்போ எஸ்..சி. மாநில அமைப்பு கமிட்டி. அப்படியென்றால் உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் "தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ....-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.
இந்திய புரட்சி பற்றி பேசும் இந்த புரட்கிர ஓநாய் கூட்டம் தமிழில் பேசாத மக்களை எந்த நாட்டிற்கு கடத்தக் கோருகிறது என்று கேட்டால் பல்ளிளிப்பார்கள். இதுதான் கேள்வி! உங்கள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? அல்லது பிழைப்புவாத இயக்கமா? உங்கள் புரட்சி தமிழகத்தில் மட்டுமா? அல்லது நாடு தழுவியதா? என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது. இதுவெல்லாம் உளவுத்துறை கேட்கும் கேள்வி என்று பசசப்புவார்கள்.
அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான். அதாவது பா... மற்றும் காங்கிரசை எதிர்ப்பதெல்லாம் சும்மா பெயருக்கு புரட்சி என்று காட்டிக் கொள்ளத்தான். அதாவது இந்தியாவில் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக சி.பி.எம். வளர்வதை இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகளும் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் புரட்சியைப் பேசிக் கொண்டே சி.பி.எம்.யை எதிர்க்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு செயலாற்றுகிறார்கள். இதுதான் .... - எஸ்..சி. கும்பலின் உண்மையான அரசியல்.
அது மட்டுமா? ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் புதிய காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் இந்த அமைப்பில் சேர்ந்து செயலாற்றிய பல தொண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கூட இந்த அமைப்பpல் நீடிப்பதில்லை என்பது உண்மையானது. அந்த அளவிற்கு இவர்களது அரசியல் சாக்கடை வீசும். தற்போது இவர்களது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு தொண்டர்கள் இவர்கள் அரசியல் சாக்கடையைப் பார்த்து ஓடி விட்டார்கள். மேலும் தற்போது இவர்கள் வினவு - வினை செய் என்று இணையத்தில் தூண்டில் வீசுகிறார்கள். உன்னுடைய உண்மையான முகம் என்ன என்று வினவுங்கள் நன்பர்களே. இன்னே வினை செய்யுங்கள். இந்த ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக.

இவர்களது நிஜ முகத்தை அறிந்து கொள்ள இதையும் படிக்கவும்.

அழுகி வரும் .... மறைமுகத் தலைமை!
பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!
அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ....!
தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ....!
.... தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்...

கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ....!சந்திப்பு

http://santhipu.blogspot.com/

4 comments:

Anonymous said...

cpm always failed in a trustful political stand. political stand is important than leaders or central comitttee. ma.ka.ee.ka has a party program. you can buy and read it. it is open.

if you/cpm have political cuts pls answer my question example only)

WHY CPM JOIN TO JEYALALITHA? BECAUSE SHE CONVICTED IN MANY CORRUPTION CASES. AND SHE IS A "RAMA PAKTHAI". SHE TOLD IN ASSEMLY HER AS PAAPPAATHY.. SHE IS AGAINST SETHU CANAL PROJECT.

Ans for this question is very important. Because you select either corruptio or fundamentalism. both are against peoples. apart from that n. varatharasan (ie original certificate name) is not a important matter.

Anonymous said...

ok pa we will discuss our plans by each and every line ok

1. we found our existing system is semi colonial, semi feudal and semi capitalist system. What is your/cpm view and how it is correct?

2. so in india, new democratic revolution is possible. what is your view?

3. what is your view on eelam and kashmir and north-eastern problems..

CITU celebrate AYUTHA PUJA. Gow you justify it.
cpm now join with aliance of jeya. is it ok for your revolution..
are you accept the varnaashramatharmaa.. if not why your peoples call such peoples as BRAHMNAAS (son of brahmmaas)...
Thirunelveli city's cpm secratary was join in sarathkumar party.. he complainted that crs. were womanisers, bankers, castist...etc in last kumudham reporter. how it is possible...
why you cant grow in many states except few.
your aliances ie aliance parties were differ from state to state. it is not our comment only. peoples generally ask ..tell maa.. how it is use to your revolution

சந்திப்பு said...


ma.ka.ee.ka has a party program. you can buy and read it. it is open.


Dear Anony

ma.ka.ee.ka. is a Political Party? We never want that. ma.ka.ee.ka is a Anony of CPI(ML) SOC.. So we want that.

Then you say it is open. why don't you give this in net openly.

If you want CPIM Party Programme

Go to www.cpim.org and get it.

You are the only party in this globe have a hidden party programme.

Then, why your activities are in the name of ma.ka.ee.ka? what about your political party?

Anonymous said...

இன்று வர்க்கப் போராட்டத்துக்கு எதிராகப் பல சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன.

பின் நவீனத்துவம், தன்னார்வக் குழுக்கள் வழங்கும் தலித் அரசியல், தீவிரப் பெண்ணியம் மற்றும் காந்தியம்.

இவற்றை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த நாசகார சக்திகளின் திரிப்பு வேலைகளை அம்பலப்படுத்தினால்தான் வர்க்க அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும். அதற்காகவாவது நாம் அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதைப் பயில வேண்டும். மா.லெ. வெளிச்சத்தில் அவற்றின் அரசியலைத் தோல் உரிக்க வேண்டும். இதுதான் சரியான அரசியல் நடைமுறையாகும்.

பிற்போக்கு சக்திகளையும், ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டுமானால் அவை என்ன சொல்லுகின்றன என்பதை நாம் பயிலத்தானே வேண்டும்?

பங்குச்சந்தை மூலம் அன்னிய ஏகாதிபத்தியம் நம் நாட்டை சுரண்டிக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் பங்குச்சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அவர்களே எளிய நூல்களை வைத்திருக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் “அள்ள அள்ளப் பணம்”.

இதைப் படிக்க வேண்டுமா? வேண்டாமா?

காந்தியின் இறுதி 200 நாட்களைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டது எதற்காக? காங்கிரசில் இணைவதற்கா? காந்தியின் அரசியல் போக்கை அறிந்து கொள்வதற்கா?

இது சரி என்றால் பங்குச் சந்தை பற்றிப் பயின்று கொள்வது மட்டும் எப்படி தவறாகும்?