மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.கொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும்.
இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்! போககட்டும்!தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்!அது சரி! இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம்! இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது? இதன் கொடி என்ன? இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்? என்று நாம் கேட்டு விட்டால் உடனே இந்த கேள்வியில் உளவு பார்க்கும் தோரணைதான் தெரிகிறது என்று உளவு பட்டம் கட்டுவார்கள் இந்த ஏகாதிபத்திய சீர்குலைவு கைக்கூலிகள். உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் இந்த நிஜ அனானிகள்.எஸ்.ஓ.சி. தன்னை இந்திய பொதுவுடைமை கட்சி என்று அழைத்துக் கொள்வதுதான் பரிதாபம்! இதைப் பார்த்து ஏதோ இவர்களுக்கு இந்தியா முழுவதும் பெரிய வலைப் பின்னல் இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்... சிலந்தி வலைதான் அவர்களை சுற்றியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குள் மட்டும் தவளை கத்தல் கத்தும் ஒரு அமைப்பே தவிர அகில இந்திய அமைப்பு அல்ல. ஒரு முக விலாசத்திற்காக அப்படி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது ஏதாவது அகில இந்திய அளவில் செயல்படும் நக்சலிச அமைப்பின் துணை கிரகமாக செயலாற்றுகிறார்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.போகட்டும்! இவர்களது திட்டம்தான் என்ன? பாவம் இவர்களிடம் இதை மட்டும் கேட்டு விடக் கூடாது! பரம ரகசியமாக பதுங்கி விடுவார்கள்!
1976இல் துவக்கப்பட்ட இந்த துணை கிரகத்திற்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி திட்டமே இல்லை என்பதுதான் வேடிக்கையானது! இந்த கருப்பிண்டங்கள்தான் உலப் புரட்சியை நடத்தப்போவதாக ஊளையிடுகின்றன. வெறும் நகல் திட்டமாகத்தான் உலா வருகின்றன. அதாவது இறுதி பெறாத திட்டம்; அதாவது அடிக்கடி தேவைக்கேற்ப கையை - காலை வெட்டிக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்! அப்பத்தான் அரசியலில் அடிக்கடி புரட்சிகர ஜோக்கர் வேஷம் போடலாம்!இந்தியாவை ஒரு நாடாக ஏற்காதவர்கள்; வெறும் வார்த்தையில் - எழுத்தில் பம்மாத்து காட்டுபவர்கள் அவர்களது திட்டத்தின் முதல் பாராவை கிழே கொடுத்துள்ளேன். எங்கேயும் இந்தியா நாடு என்று வராது. அதுதான் அவர்களது மறைமுக பாரதீய அஜண்டா... இந்திய மக்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.
"நமது அன்பிற்குரிய இந்நாடு உலகின் மிகப் பெரியதும், பழைமையானதுமான நாடுகளில் ஒன்று. 95 கோடி மக்களைக் கொண்ட நாடு. உழவர் பெருங்டிக மக்களை மிகப் பெருமான்மையாகக் கொண்ட விவசாய நாடு....."காரல் மார்க்ஸ் இந்திய பொருளுற்பத்தி முறையை ஆசிய பாணி பொருளுபத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறார். இந்த வரியை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு தனது திட்டத்திலும் சேர்த்துக் கொண்டு குழப்புவதில்தான் இவர்களது அலாதியான திறமையே வெளிப்படுகிறது."
இந்திய சமுதாயத்தில் ஆசிய சொத்துடமை வடிவமும் அதன் அடிப்படையிலான கிழக்கத்தியக் கொடுங்கோன்மையும் நீண்ட காலம் நிலவியது. இதன் கீழ் சட்டபூர்வமாகத் தனிச் சொத்துடைமை இல்லை...."அன்பு அனானிகளே! இணையத்தில் உலாவும் பொருளாதார ஞானிகளே இவர்களது கூற்று சரியா? என்பதை கொஞ்சம் எனக்கும் விளக்குங்கள்! அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லையாம்? அப்படியென்றால் சோசலிச சமூகமாக இருந்தது என்று கேள்வி எழுப்பாதீர்கள்? அவர்கள் பார்வையில் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வைத்திருந்த குறுநில மன்னர்கள், நிலப்பிரபுக்கள், நிலத் திமிங்கலங்கள் எல்லாம் பாடமல் போனதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது! இப்போது தெரிகிறதா? இவர்கள் யாருடைய நலனை காப்பதற்காக செயல்படுகிறார்கள் என்று! இவர்களின் உண்மையான வர்க்க முகம் ஏகாதிபத்திய சீர்குலைவு முகமே! உடனே நவீன வழக்கறிஞர்கள் போல் வாதாடலாம் மடயனே சட்டப்பூர்வமாகத்தானே இல்லையென்று சொல்லியுள்ளோம் என்று. அதை கண்டு நீங்கள் நகைக்க வேண்டாம்!ம.க.இ.க. பார்ப்பனீம் என்று சொல்லும் போது நமக்கு கூட ஒன்றும் புரியவில்லை! அவர்கள் மனு அதர்மர்த்திற்கே ஐ.எஸ்.ஓ. 2000 சான்றிதழ் வழங்குவதை கீழே கவனியுங்கள்.
"பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வர்ணங்களும் மற்றும் வர்ணத்தில் சேராத பஞ்சமர் - சண்டாளர் அடங்கிய சமூக எஸ்டேட்டுகள், அவற்றிற்கு அடிப்பைடயாக அமைந்த சாதிய அமைப்புகளின் அடிப்படையிலான வேலைப் பிரிவினைகள் இருந்தன...."
தமிழச்சிகள், பெரியாரியவாதிகள் கோபப்படக் கூடாது. அதாவது மனு நமக்கு விதித்தது வேலைப் பிரிவினையைத்தான் தீண்டாமையை அல்ல! இதைத்தான் அவர்கள் ம.க.இ.க. தலைமை மிக அழுத்தமாக குறிப்பிடுகிறது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வு பெரும் பகுதி உழைப்பாளி மக்களை சுரண்டி - கொழுத்து தீண்டத் தகாதவர்களாக வெறும் நடைப்பிணங்களாக ஆக்கி வைத்துள்ளதற்கான அடிப்படையே நால்வருணத் தத்துவம்தான்! ஆனால் இதனை வேலைப் பிரிவினை நம்மை ஏய்கிறது எஸ்.ஓ.சி. இவர்கள்தான் நவீன மனுதர்மவாதிகள்.அதைவிட கொடுமை என்னத் தெரியுமா? ஆசியபாணி சமூகம் என்று சொல்லி நிலம் தனிவுடைமையாக இல்லை என்று கூறிய பிறகு இவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.
"எல்லா கிராமச் சமூகங்களுக்கும் மேலே அதி உயர்ந்த அதிகாரமாகவும் இணைக்கும் ஒருமையாகவும் விளங்கிய மத்திய அரசிடமிருந்து தனி நபர்கள் அனுபோக உரிமைகளைப் பெற்றனர்..."
அதாவது, கிராம மக்கள் நிலத்தை தாங்கள் தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்களாம்! எந்த மத்திய அரசு என்பதை மட்டும் விளக்க மறந்து விட்டார்கள்? பிரிட்டிஷ் அரசா? அல்லது தற்போதைய மத்திய அரசா? (ஐயையோ.... இப்ப உள்ள அரசு காலனி அரசு... அதாவது அடிமை அரசு...) பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையில் வைத்திருந்த மூப்பனார்கள் - வாண்டையார்கள் - சாம்பசிவ ஐயர்களிடம் எல்லாம் அப்போது அதிகாரமில்லையா? மத்திய அரசை ஆட்டியதே இந்த நிலப்பிரபுக்கள்தானே! அப்புறம் எப்படி மத்திய அரசிடம் இருந்து அனுபோக உரிமை பெற்றார்கள்?கடைசியா இந்த ஆசியபாணி சமூக பித்தலாட்டத்தை இவர்களே அம்பலப்படுத்துவதை கொஞ்சம் கவனியுங்கள்.
"ஆங்கிலேயே காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை காலனியாக்கிய பின் அதுவரை நீடித்திருந்த ஆசியச் சொத்துடமை வடிவிலான சிறு கிராம சமூகங்களின் நிலப்பிரபுத்துவப் பொருளாதார அடிப்படையைத் தகர்த்தனர். பொதுச் சொத்துடைமையின் இடத்தில் தனியுடைமையப் புகுத்தினர்..."
ஆஹா... அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேள்விப் பட்டிருக்கோம்... எஸ்.ஓ.சி. புளுகு இப்பத்தான் வெளிப்பட்டது. முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனிச் சொத்துடைமை இல்லை என்று கூறி விட்டு, அப்படியே 3வது பிரிவில் அந்தர் பல்டி அடித்து பிரிட்டிஷ் அரசு ஆசிய பாணி சொத்துடைமையை ஒழித்து விட்டது என்று கூறுவது யாரை திருப்திப்படுத்த! அதை விடக் கொடுமை நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படையைக் கூட தகர்த்து விட்டனராம்! அதாவது இந்தியாவில் தற்போது எங்கும் நிலப்பிரபுக்கள் இல்லை! அனைத்து நிலங்களையும் பிரிட்டிஷ் அரசு பிரித்துக் கொடுத்து புரட்சி செய்து விட்டது! நம்புங்கள் ம.க.இ.க. தலைமை ஊளையிடுகிறது அது நரி என்று நம்புங்கள்!...
2 comments:
ixrreivDear viduthalai
R u read the full plan? If you read para by para and gave your description it changed to yours' version only.
1. ru support devars/vanniars for their mbc quota. if s y they suppress other sc/st peoples.
2. r u know the base of asian system about land ownership? Do u know the cosequent changes of ryathvaari, mahalvaari and jaminthaari
3.If u listen all books yet you will understand that the unfinalised party program.
--if you want to know the depth of philosophical image you should ready to join the difficult journey. Every science have give the extracts at end or first of its way. Sensible persons can meet and eat the honey
//கொல்லப்பட்ட ராஜேந்திரனை ம க இ கதான் கொன்றத என்ற இந்த அரிய உண்மையை கண்டுபிடிப்பதற்க்கு CPM ஏன் இத்தனை நாள் எடுத்துக் கொண்டது என்ற ரகசியத்தையும் வுடுதலையே சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும்.//
உண்மையை வெளியிட்டது ஜுலை 21ந்தேதி இதில் ரகசியத்தை கண்டுபிடிக்கவேண்டிய அவசியமே இல்லை யோக்கியர்களே
//அப்புறம், அந்த கிராமத்தில் மக்கள் ம க இகவை வெறுக்கிறார்கள் எனில் CPM ஏன் அங்கு செல்ல முடியவில்லை என்பதையும், ம க இ கவுடன் பெருந்திரளாக மக்கள் அங்கு அணி திரள்வது ஏன் என்பதையும் கூட வுடுதலை விளக்கலாம்.//
திமுக, அதிமுக, தேமுதிக அந்த கட்சிகளில் கூட பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள், உங்களை போன்ற போலிகள் கொள்கையை சொல்லி மக்களை வென்றெடுப்பதை விட அடக்குமுறையாலும் ,அதிகார பலத்தாலும் , சாராயம் காய்ச்சி விற்பதாலும் ,சாதி வெறியாலும்
குண்டர் ரவுடிகளாலும் நடத்தப்டும் ஆராஜகவாதிகள் கேட்ககூடாத கேள்வி இது பெரும்பாலும் தலித் உறுப்பினர்களாக உள்ள சிபிஎம் கட்சி தோழர்களை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை போலிகளே !
Post a Comment