Monday, March 21, 2011

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!


ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்றபெயரில் உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே TNOC யின் திட்டம் உள்ளது.

(சி.பி.ஐ.-எம்-எல்) TNOC.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

"ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "
"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "

அதாவது இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...
இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொடர்ந்த முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.

இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சியையும், ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!

காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடதுசாரி - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்டதைதான் இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.

ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.

இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!

இந்த வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்ப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?

".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "

தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித்தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.

மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!

நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.

சந்திப்பு

http://santhipu.blogspot.com/

Wednesday, February 2, 2011

சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும்வர்க்க சேவகர்களே.





சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி வருகின்றனர். சத்தீஷ்கர் ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரகொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர்களை கொலைசெய்வது, கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறிஉள்ளது. இவர்களாலும், இவர்களது நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையோ, முன்னேற்றமோ சாத்தியமில்லை. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கிறது. இவர்களது தெளிவற்ற திட்டமும், தேவையற்ற வன்முறையும் ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வலுசேர்ப்பதாகவே உள்ளது. மேலும் இவர்கள் வெகுமக்களை அணிதிரட்டியுள்ள இடதுசாரி இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் இவர்களது ஆளும் வர்க்க எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துக்கிறது. இவர்களை தோற்கடிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாத்தியமில்லை. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வெகுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தவேண்டும். அதே நேரத்தில்இவர்களதுகோட்பாடு,திட்டம்,நடைமுறைத்தந்திரத்தில்உள்ளஇடது
குறுங்குழுவாதத்தையும்,அராஜகவாதத்தையும் தோலுரித்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

புதிதல்ல..பழைய கள், பழைய மொந்தை

இடது குறுங்குழுவாதம் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு புதிதல்ல. 1948-51ம் ஆண்டுகளில் உருவான ஒரு போக்கு, இந்திய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். எனவே புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்று. அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்டது. மீண்டும் 1967-68 ல் நக்சலிசம் என்ற பெயரால் இடது குறுங்குழுவாதம் தலைதூக்கியது. 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டு அதன் 7வது மாநாட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தத்துவார்த்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இக்காலத்தில் இம்மாநாடு முடிந்த கையோடு முக்கியத்தலைவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். விவாதம் முழுமையடையாத சூழல். இதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்திற்கு எதிராக சரியான நிலை எடுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இடது குறுங்குழுவாதம் என்ற தவறான பாதை நோக்கி சென்றது, இந்திய அரசு ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று தீமானித்தது. இதே நிலைபாட்டை இந்தியாவில் இருந்த இடது குறுங்குழுவாத சிந்தனையாளர்கஙள், நக்சலைட்டுகள் எடுத்துக்கொண்டு 1970ல் சிபிஐ(எம்.எல்.) என்ற கட்சியை துவக்கினர்.

1969-71ம் ஆண்டுகளில் ஆயும் தாங்கிய போராட்டத்தை துவக்கினர். ஆயுதப்போராட்டத்தின் முக்கிய வடிவம் தனிநபர்பளை அழித்தொழித்தல். இதனால் சில நிலபிரபுக்களும், அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டனர். தளம் அமைத்து ஒவ்வொரு பகுதியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றனர். ஒரு தீப்பொறி காட்டுத்தீயாக பரவும் என்றனர். ஆனால் அது நடக்கவில்லை. அது அணைந்து விட்டது. மாறாக புரட்சிகரமான வெகுஜன இயக்கம் வளர்வதற்கு இந்த தனிநபர் அழித்தொழித்தல் தடையாக அமைந்தது. இவர்களால் விவசாயிகளை அணிதிரட்ட முடியாதது மட்டுமல்ல, அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியாமல் அவர்களால் எழுச்சி என்று அழைக்கப்படுகிற நக்சல்பாரி, கோபிபல்லபூர், ஸ்ரீகாகுளம் போன்றவைகள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியிலிருந்து தங்களது செயல் தளத்தை நகர்புறத்திற்கு மாற்றினர். குறிப்பாக கல்கத்தா மற்றும் புறநகர் பகுதிக்கு வந்தனர். அங்கும் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை. எனவே, வர்க்க எதிரிகளை ஒழித்துகட்டுவது என்ற பெயரால் போக்குவரத்து போலீஸ்காரரையும், சிறு அலுவலர்களையும், பல்கலைக்கழக துணை வேந்தைரையும் கொலை செய்தனர். மேற்கு வங்கத்தில் 1971-ல் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சி நடந்தபோது அவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை வேட்டையாடினர். 1972ல் ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை படுகொலை செய்தனர். ஆனால் அவர்களது நகர்புற எழுச்சியும் பிசுபிசுத்துபோனது. ஒன்றுபட்ட கட்சியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறிய கருத்து வேறுபாடுகளைகூட தீர்க்கமுடியவில்லை. எனவே 1971ல் சிபிஐ(எம்.எல்.) இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்து பல குழுக்களாக சிதைந்து செயலிழந்தது. ஆதிவாசி மக்களில் ஒரு சிறு பகுதி தவிர இதர விவசாயிகளைகூட திரட்ட முடியவில்லை. ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், பகுதியில் ஆதிவாசி மக்களிடம் இருக்கிற செல்வாக்கை வைத்து இப்போது சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று வெளிவந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் எதையும் இவர்கள் படிப்பினையாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உலக மாற்றங்களை கிரகித்து கொண்டதாகவும் தெரியவில்லை. குழப்பத்தினூடே பயணம் தொடர்கிறது.

சுருக்கப்பட்ட ஏகாதிபத்தியம்-மறைக்கப்பட்ட சோசலிசம்

எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவம், திட்டம், தந்திரோ உபாயம்,நடைமுறைதந்திரம் மிகவும் அடிப்படையானவை. குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் கட்சிக்கு அத்திட்டத்தில் புரட்சியின் தந்திரோபாயங்கள் கோடிட்டு காட்டப்படவேண்டும். இந்த தந்திரோபாயமும் அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல் மேல்கட்டுமானம், மற்றும் சமூகம் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். சரியான தந்திரோபாயத்தை உருவாக்க அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியிலான வர்க்க சேர்மானம் பற்றிய ஸ்தூலமான ஆய்வுகள் அடிப்படையானது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.
மாவோயிஸ்டுகளின் தங்களது திட்டத்தில் மார்க்சிய-லெனினிய மாவோயிச சிந்தனைகள்தான் தத்துவ வழிகாட்டி என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய செயல்பாட்டை மிகவும் சுருக்கி முக்கியத்துவமற்ற முறையில் கொடுத்துள்ளனர். வளர்ந்த முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இதன்மூலம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் அவ்வப்போது ஏற்பாடும் பொருளாதார நெருக்கடியை சரிகட்டுகிறது. இத்துடன் கூடவே தொழிலாளர் மற்றும் இதர பகுதி மக்களின் நலன்களை வெட்டிச்சுருக்குவது, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலைபறிப்பு, நிதிமூலதனத்தால் நாடுகளின் இறையாண்மை பறிக்கப்படுவது போன்ற எண்ணற்ற ஏகாதிபத்திய தாக்குதல் பற்றி மாவோயிஸ்டுகள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இடம்பெறவில்லை. ஏகாதிபத்தியங்களின் இருமாபெரும் உலக யுத்தங்கள் பற்றியும் அது தேசவிடுதலைப் போராட்டத்தை அடக்கியது பற்றிய நிலைமைகளைகூட குறிப்பிடப்படாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முழுமை பெறுமா?
உலகில் சோவியத் யூனியன் இருந்தது உண்மை. அது தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகள் சில துறைகளில் சுயமாக முன்னேற ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்க உதவி புரிந்தது. சோசலிச முகாம் மற்றும் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு உலக வர்கக சக்திகளின் பலாபலன்களில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் பலம் அதிகரித்தது. வளரும் நாடுகளை இது கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் இந்தியவில் உள்ள மாவோயிஸ்ட்கள் பழைய நக்சலைட்டுகளின் பார்வையை தற்போதும் தொடர்கின்றனர். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் என்றும் அமரிக்க ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது என்றும் அறிவித்துள்ளனர். 1956-லேயே சோவியத் யூனியனில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்றும் 1976க்கு பிறகு சீனாவும் முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் அறிவித்தனர். தற்போது அவர்கள் பார்வையில் உலகில் சோசலிச முகாம் இல்லை. ஒரு சோசலிச நாடுகூட இல்லை என்பதுதான். கியூபாவைக்கூட குறிப்பிடத் தயாராக இல்லை. 20ம் நுற்றாண்டின் சோசலிச கூட்டமைப் பையும் அதன் அனுபவத்தையும் பாசீலிக்கக்கூட தயாராக இல்லை. சீனாவில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் கடைபிடித்த வர்க்க ஆய்வு, ஆயுதப்போராட்டம், தந்திரோபாயம், நடைமுறை தந்திரத்தை ஆகியவற்றை அப்படியே இயந்திரகதியாக கடைபிடிப்பதுதான் இவர்களின் உலக அனுபவ சித்தாந்தம், இந்த குறுகிய பார்வை உழைப்பாளி மக்களை சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவுமே உதவும்.

ஊனப்பார்வையா? உருக்குலைந்த சிந்தனையா?

உலகப்புரட்சியின் உந்து சந்தி தேசவிடுதலைப்போராட்டம் என்று கூறுகின்றனர். சோவியத் யூனியன் தேசவிடுதலைப் பேராட்ட இயக்கங்களுக்கு அளித்த ஆதரவை ஒருபொருட்டாகவே மதிப்பீடு செய்ய மறுத்தவர்கள், தற்போது தேசவிடுதலைப்போராட்டமே உலக புரட்சியின் பிரதான இருப்பு என்று பறைசாற்றுகின்றனர். இதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மையம் என்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் இருந்து கொண்டருக்கிறது. இதைப்பற்றி இவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக தற்கால உலகில் தெற்கு ஆசியாதான் தேசவிடுதலைபோரின் கூர்முனையாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, வடமேற்கு மாகாணம், பகுதிகளிலும் போர்குணமிக்க எழுச்சிகள் வெடித்து கிளம்புகின்றது என்கின்றனர்.இஸ்லாமிய எழுச்சி அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மைகொண்டது. எனவே அது வளரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவிக்கின்றனர். என்ன சிந்தனை இது? மார்க்சிச, லெனினிச, மாவோயிச தத்துவத்தை வழிகாட்டி என்று பறைசாற்றிய மூளையிலிருந்து இப்படி உருக்குலைந்த பார்வையா?

தாலிபான், அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களின் போராட்ட இலக்கு என்ன? இஸ்லாமிய அரசை நிறுவுவது, அதுவும் மத அடிப்படையிலான ஷரியத் சட்டம், ஜனநாயக அரசியலுக்குத்தடை, பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தற்கு தடை, பிற்போக்குத்தனமான நிலபிரபுத்துவ நடைமுறைகள், பழக்க வழக்கங்களை கடைபிடிக்க துடிக்கும் அமைப்புகளின் போராட்டத்தை தேசவிடுதலை என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் வர்ணிக்கின்றனர், தாலிபானும், அல்கொய்தாவும் அமெரிக்க சிஐஏவால் உருவாக்கப்பட்டு ஆப்கானில் சோவியத்யூனியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இவர்கள் அறியாததா? இவர்களைத்தான் முற்போக்கு முத்திரை குத்தி தங்களது கூட்டாளிகள் என்று பறைசாற்றுகின்றனர்.
இந்த உருக்குலைந்த பார்வை எங்கிருந்து உருவாகிறது? உலக முரண்பாட்டை பற்றிய பலவீனமான மதிப்பீட்டிலிருந்து உருவாகிறது.உலகில் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் என்பதும், இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும்-சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இதுதான் நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட. மாவோயிஸ்டுகள் பிரதான முரண்பாடாக ஏகாதிபத்தியத் திற்கும்-அடக்கப்பட்டநாடுகள்/மக்கள் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுதான் பிரதானமுரண்பாடு என்று தீர்மானிக்கிறது. 1970-80ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் சீன கட்சியிடமிருந்து அவதானித்த மூன்றுலக கோட்பாடுகளிலிருந்து அவர்களது மூளை முற்றிலும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா-ரஷ்யா என இரு வல்லரசுகள் முதல் உலகம், இதர ஏகாதிபத்திய நாடுகள் இரண்டாம் உலகம், ஜப்பான் தவிர மற்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற நிலையை தொடருகின்றனர். மூன்றாம் உலகம் மற்ற இரு உலகத்தையும் சுற்றி வளைத்து வெற்றிகொள்ள வேண்டுமாம்? காலம் மாறிவிட்டது, வர்க்க உறவுகள் மாற்றம், சீனக்கட்சியே வலியிறுத்தாத கருத்து, இவர்களை சிறைபிடித்து சிக்கவைத்துள்ளது.

தரகு முதலாளியா ? தனித்துவமான முதலாளித்துவமா?

இந்திய சமூகத்தை பற்றி மதிப்பீடு செய்கிறபோது, நவீன காலனித்துவத்தால் மறைமுகமாக ஆளப்படுகிற சுரண்டப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரவுத்துவ சமூக அமைப்பு என்று கூறுகின்றனர். இது 1939-ல் சீன சமூகம் பற்றிய மதிப்பீட்டை அப்படியே யந்திரகதியாக நகல் எடுப்பதாகும். அன்று சீனா பல ஏகாதிபத்தியத்தால் கூறுபோடப்பட்டிருந்தது. யுத்த பிரபுக்கள் பலர் ஆட்சி புரிந்தனர். மைய்ய அரசு என்பது இல்லை. தேசிய முதலாளிகளைவிட தரகு முதலாளிகள் பலர் ஏகாதிபத்தியத்துடன் உறவு வைத்து செல்வாக்கு செலுத்தினர். அப்படிப்பட்ட நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? மைய அரசு இல்லாமல் பல ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் தீமானிக்கிறதா? இல்லவேஇல்லை. ஆனாலும் இந்திய அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம் ஆளும் வர்க்கம் அனைத்தையும் சுதந்திர இந்தியா என்ற அறிவிப்பு பலகைக்கு பின்னால் இருந்து ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்துகிறது என்று கண்ணைமூடிக்கொண்டு கூறுகின்றனர். இந்தியாவிற்கு என்று எந்த தனித்துவமும் இல்லை என்பதுதான் இவர்கள் கூற்று.
இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய பெரும் முதலாளித்துவ, பெரும் நிலபிரபுத்துவ தலைமையிலான கூட்டு சர்வாதிகார அரசு என்றும், இந்த பெரும் முதலாளிகளும், பெரும் நிலபுரபுக்களும் உண்மையில் தரகு முதலாளிகளே என்று வரையறுக்கின்றனர். தரகு முதலாளி என்பது ஒரு பின்தங்கிய காலனித்துவ நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு வர்த்தக ரீதியில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அவர்களது உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ஆவர், இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஆவர். இந்திய முதலாளிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா? அடிப்படை தொழிலான உருக்கு, இயந்திரம், தானியங்கி, துணி, தகவல் தொடர்பு, எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் என எண்ணற்ற தொழில்களில் இந்திய முதலாளிகள் ஏகபோகமாக உள்ளனர். இந்திய முதலாளிகள் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இருபத்தி இரண்டு ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1957ல் 312.63 கோடியாக இருந்தது. இது 1997ல் 500 மடங்கு அதிகமாகி 1,58,004.72 கோடியாக உயர்ந்துள்ளது. பத்து தனியார் கார்பொரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-ல் 3,54,000 கோடியிலிருந்து 2008-ல் 10,34,000 கோடியாக நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களா தரகு முதலாளிகள்? மாவோயிஸ்டுகளின் தரமற்ற மதிப்பீட்டால்தான் இந்த தவறான முடிவுக்கு வருகின்றனர். இந்திய பெருமுதலாளிகளுக்கு தொழில் அடிப்படை மட்டுமல்ல வர்த்தகம் மற்றும் சேவைத்துறையிலும் பெரும் பங்கு உள்ளது. இவர்களின் நலன்களை பாதுகாக்க பல நேரங்களில் ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகின்றனர். பல நேரங்களில் ஒத்துப்போகின்றனர். தங்களது சந்தை, சந்தையை பாதுகாக்கும் விஷயத்திலும் உலகச்சந்தையில் பங்கு பெறுவதிலும் மோதல் ஏற்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுடன் ஒப்பிடும்போதும், தொழில் நுட்பம் தொடர்பான விஷயம், மூலதன திரட்சி ஆகியபற்றில் ஒத்துப்போகும் தேவை உள்ளது. எனவே இந்திய முலாளித்துவம் இரட்டைத்தன்மை குணமுடையது என்று மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இவர்களை தரகு முதலாளிகள் என்றோ, கமிஷன் ஏஜன்ட் என்றோ மதிப்பிடுவது எதார்த்த நிலைக்கு பொருந்தாது.

புரட்சியின் கட்டம் + நேச சக்திகள் + தலைமை = குழப்பம்
இந்திய புரட்சியின் கட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவாறுவரையறுக்கிறது.இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவமோ அதற்கு முந்தைய சமூக அமைப்பை அழித்தொழிக்கவில்லை. எனவே இந்த கடமை தொழிலாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியின் மீது விழுந்தது. எனவே அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.

ஆனால் மாவோயிஸ்டுகளை பொறுத்தவரை இந்தியா இன்றும் ஏகாதிபத்திய சக்திகள் கீழ் உள்ள அறை காலனித்துவ நாடாகும். எனவே தற்போதைய புரட்சியின் கட்டம் தேசிய விடுதலை அல்லது ஏகதாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய உள்நாட்டு கூட்டாளி நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும் பொதுவான ஐக்கிய முன்னணியை கட்டவேண்டும் என்பதுதான். இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக முதலாளிகள் இருப்பார்கள் என்கின்றனர். அதாவது தேசவிடுதலையும், ஜனநாயக புரடசியையும் கலந்து குழப்பிக் கொள்கின்றர். புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.

புரட்சியின் நேச அணியில் பாட்டாளி வர்க்கம் மைய்யமானது என்றாலும், பணக்கார விவசாயிகள், குட்டி முதலாளிகள், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் பற்றிய மதிப்பீடுகள் தெளிவாக திட்டவட்டமாகவும் இல்லை. கிராமப்புற பணக்கார விவசாயிகள் பெரும்பகுதி புரட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி நடுநிலையாகவும், சிறு பகுதி எதிரிகளுடனும் அணி சேருவர் என்று மதிப்பீடு செய்கின்றர். எதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு வருகிறது ? நிலபிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வணிகர்கள்தான் கிராமப்புறபணக்காரர்களின் அச்சாக உள்ளனர். இவர்களிடம் ஊசலாட்ட தன்மை இருக்கும், ஆனால் புரட்கிரமான சூழல் ஏற்படும் தறுவாயில்தான் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று தீர்மானிக்க முடியும். மாவோயிஸ்டுகள் இப்போதே ஜோசியம் பார்ப்பதுபோல் அறிவிப்பது அபத்தமானது. இதேபோன்று குட்டி முதலாளிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையான கூட்டாளி என்று மொட்டையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. குட்டி முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், முதலாளித்துவ பாதையாலும், நவ தாராளமய கொள்கையாலும மேன்மையும் , பலனும் அடைந்துள்ளது. இதனால் இவர்கள் படகை புரட்சிகர இயக்கத்தின் பக்கம் செலுத்துவதைவிட ஆளும் வர்க்கம் பக்கமாக செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளிவர்க்கத்தலைமை பற்றி மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தின் பேசுகின்றனர். ஆனால் தொழிலாளா வர்க்கம் மத்தியில் வேலை செய்வது, அணிதிரட்டுவது சிறிதளவு கூட இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டாமல் எப்படி தொழிலாளிவர்க்கம் தனது தலைமைபாத்திரத்தை நிறைவேற்றமுடியும்? மக்கள் யுத்தத்தின் அடிப்படை உந்து சக்தி விவசாயிகள். கிராமப்புறங்களை விடுவித்த பிறகுதான் நகர் புற விடுதலை என்ற பழைய சித்தாந்த திட்டத்திலிருந்து மீளவில்லை. ஜனநாயக புரட்சியின் தலைமை பாத்திரம் பற்றி வார்த்தைகளில் உள்ளது, நடைமுறையில் பழைய செயல்முறைகளே.

மக்கள் யுத்தமா ? அபத்தமா ?

இன்றைய புரட்சியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் நம்பும் ஒரே தந்திரம்நீண்ட கால மக்கள் யுத்தம் என்பதாகும்.நம்மை போன்ற நாட்டில் புரட்சியின் தொடக்கம் ஆயுத போராட்டம் மூலமாகவே நடக்கும் மற்ற அனைத்து போராட்டங்களும் இதற்கு உறுதுணையாகவே அமைய வேண்டும்.
தொழிலாளர்கள், நகர்புற ஏழைகளை அணிதிரட்டாமல் கிராமப்புறத்தில் கூட விவசாயிகளை அணிதிரட்டாமல் ஆயுத போராட்டம் எப்படி சாத்தியமாகும்? வெற்றி பெறும்? அவர்களின் 40 ஆண்டுகால அனுபவத்தில் விவசாயிகளை அவர்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காக கூட திரட்டமுடியாதவர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு வருவார்களா?
இதே காலத்தில் ஆளும் வர்க்க அரசு கட்டமைப்பின் அசுர வளர்ச்சியை துளிகூட கணக்கில் எடுக்கவில்லை. ஏங்கல்ஸ் 1848-ல் அரசு இருந்த நிலைமையில் தடையரண்போராட்டங்கள் பலமாக இருந்தது. இது 1895-ல் நிலைமைகள் மாற்றம் ஏற்பட்டு அரசு பலத்தை கூட்டியுள்ளதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று ஜம்பது ஆண்டுகால அனுபவத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார். ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய அரசின் தகவல் வளர்ச்சி. போக்குவரத்து, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பலமான ராணுவம் என அரசின் அசுர வளர்ச்சிபற்றி சிறிதும் கணக்கில் எடுக்காத கனவுலக திட்டமாக ஆயுத போராட்டம் என்று அறிவிக்கின்றனர். எனவேதான் இவர்களது மக்கள் யுத்தம் என்ற பெயரால் நடத்துகிற தனநபர் அழித்தொழித்தல் திட்டம், அரசியல் எதிரிகளையும் அடிமட்ட அரசு ஊழியர்களையும் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. அவர்களை மட்டுமே படுகொலை செய்கின்றனர். விவசாய புரட்சிகளின் எதிரிகளாக இருக்கக்கூடிய நிலபிரபுக்களையோ அல்லது பெருமுதலாளிகளையோ இவர்கள் அழித்தொழித்ததாக வரலாறு இல்லை. காரணம் இவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் 2009-ல் தனது பேட்டியில் நாங்கள் தொழில் நிறுவனங்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணம்வசூலிக்கின்றோம், இதில் ஒன்றும் தவறில்லை. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கவில்லையா? என்று கேட்கின்றார். வர்க்க எதிரிகளிடமே சரணாகதி அடைந்துவிட்டு யாருக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றனர்? இவர்களது ஆயுதக்குழு சில தாக்குதல்களை நடத்திவிட்டு காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும், அதன்பிறகு அரசுபடைகள் அங்குள்ள ஆதிவாசிமக்களை வேட்டையாடும்போது அவர்களை பாதுகாக்க முடியாத கையறு நிலையாக இருப்பார்கள். இதுதான் சட்டிஸ்கர், ஜார்கன்டில் நடந்து வருகின்றது. ஒரிசாவில் விஎச்பி தலைவரை 2008-ல் படுகொலை செய்துவிட்டு காடுகளில் ஒளிந்துகொண்டனர். இதன்பிறகு பல ஆயிரம் கிறிஸ்துவ மக்கள் வேட்டையாடப்பட்டனர், வீடுகளையும், வழிபடும் இடங்களை இழந்தனர். இதுதான் இவர்களது ஆயுதப்போராட்டத்தின் அன்பளிப்பு ?

பூனை கண்ணை மூடிக்கொண்டால்..

தேர்தல் மற்றும் ஜனநாயக நடவடிக்கை பற்றி யெல்லாம் மாய உலகத்தில்தான் மாவோயிஸ்ட்கள் சஞ்சரிக்கின்றனர். தேர்தல் வரும்போது புறக்கணிப்பை அறிவிப்பார்கள். தேர்தலில் பதிவாகாத வாக்குகளை தங்களது வெற்றி என்று அற்பமான முறையில் பறைசாற்றி கொண்டாடுவார்கள்.2009-ல் சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியத்தில் சுமார் 50 சதமான வாக்குகள்தான் பதிவானது என்பதை சுட்டிக்காட்டி, வாக்களிக்காதவர்கள் மாவோயிச அழைப்பிற்கு செவிசாய்த்தனர் என்றனர். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதுபோல் பம்பாயில் 57 சதமான மக்கள் வாக்களிக்கவில்லை, இவர்கள் எல்லாம் மாவோயிச ஆதரவாளர்களா? என்றார். கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கும், மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக்கணிப்பு மதிப்பீடும் ஒன்றுதான்.

பாராளுமன்றமும் இதர ஜனநாயக அமைப்புகளும் புரட்சிகர முன்னேற்த்திற்கு தடையானது என்றும், அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் மாவோயிஸ்டுகள் வாதாடுகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கம் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர். சோவியத் யூனியனில் ஜனநாயகத்தை ஆழப்படுத்தாமல் சோசலிச தன்மைகள் மீறப்பட்டதால் அதிகாரவர்க்கப்போக்கும், அரசு கட்சி வேறுபாடின்றி செயல்பட்டதும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர் என்பதைகூட இந்த மாவோயிஸ்டுகள் பாடமாக கற்க தயாராக இல்லை. ஏன் பக்கத்து நாட்டு நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட்கள் குறிப்பிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பல கட்சி ஆட்சிமுறையை பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்து செயல்படுகின்ளனர்.அதைகூட பாடமாக இவர்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.

வடகிழக்கு மாகாணத்திலும், காஷ்மீரிலும் பிரிவினை வாத இயக்கத்தை இவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் பிரிந்துபோவதை எதிர்க்கதேவையில்லை என்று கூறுகின்றனர். தேசிய சுயநிர்ணய உரிமையை மொத்த சூழ்நிலையுடன் பொருத்தாமல் இயந்திரகதியாக பேசுகின்றன. 1840-ல் காரல் மார்க்ஸ் போலந்து மற்றும் ஹங்கேரி தேசிய இயக்கத்தை ஆதரித்தார். காரணம் ருஷ்ய மற்றும் ஆஸ்திரிய பேரரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நின்றதுடன் அவர்களது அரசியல் ஜனநாயகம் ஐரோப்பிய தொழிலாளிவர்க்கத்திற்கு அடிப்படை தேவையாக இருந்தது. அதே நேரத்தில் ரஷ்ய ஜார் மன்னருக்கு ஆதரவாக எழுந்த செக் மற்றும் தெற்கு ஸ்லாவ் இயக்கத்தை எதிர்த்தார். காரணம் இது தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமானதாக இருந்தது. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்துடன் ஒப்பிட்டுத்தான் தேசிய சுயநிர்ணய உரிமை கணக்கில் எடுக்கப்படவேண்டும். காஷ்மீர் தனியாக செல்வது, அல்லது பாகிஸ்தானுடன் செல்வது என்பது அமெரிக்க ஏகாதிபத்யம் காலுன்ற அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் நாடுகளில் தலையிட தளமாக அமையும் என்பதை இன்றைய சர்வதேச அறிவுள்ள எவரும் கணிக்கமுடியும். ஆனா மாவோயிஸ்டுகள் இதை பார்க்க மறுக்கின்றனர். ஆயுதம் தாங்கிய அனைவரும் போராளிகள், விடுதலையாளர்கள் என்று மட்டமாக மதிப்பிடுவது விஞ்ஞான பார்வையல்ல.
மாவோயிஸ்டுகள் தாக்குதளின் இலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது சமீபத்திய விபரங்கள்கூட நிரூபணம் செய்கிறது. சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் ,மாநிலத்தைவிட மேற்குவங்கத்தில் 57 சதம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 1,76,668 ஆதிவாசிகளுக்கு 1,97,350.39 ஏக்கர் நிலம்பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. மார்க்சிஸ்டுகள் மக்கள் தளத்தை இழந்துவிட்டால் அவர்களை தாக்க வேண்டிய தேவை மாவோயிஸ்டுகளுக்கு இருக்காது. அங்கு மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருப்பதாலேயே அதன் ஊழியர்களை, தலைவர்களை கொலை செய்துவிட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

ஆளும் வர்க்க சேவகம்:

வலது திருத்தல் வாதமும் இடது அதிதீவிரவாதமும் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்பது உலக வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகளும், தற்போதைய மாவோயிஸ்டுகளும் இதையே செய்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர். 1972ல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை படுகொலை செய்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்தும், இதர பிற்போக்கு மதவாத சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்குகின்றனர். 2009-ல் மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஸ்வரராவ் அடுத்த மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜியை பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது புரட்சிகரமான கொள்கையை பேட்டியாக கொடுத்தார். இதனால்தான சில முதலாளித்துவ பத்திரிகைகள் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு மாற்று என்றும், அதிகாரபூர்வ இடதுக்கு மாற்று என்றும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாலை சூடுகின்றனர்.சில அறிவுஜீவிகளும் இதற்காக சில சாகசசெயலில் ஈடுபடுகின்றனர்.சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளது போல் இந்த மாவோயிசம் கனவின் மரணம் அல்ல, மாறாக ஆளும்வர்க்க கனவின் செயலக்கம்மிக்க வீரர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் மக்கள் செல்வாக்கு படைத்த இடதுசாரி இயக்கத்தை ஒழிக்க நேரடியாக ஈடுபடுகிறது. இந்திய பெருமுதலாளிகளும் இதே வேலையினை செய்கின்றனர். இவர்களுடன் கைகோர்த்து மாவோயிஸ்டுகள் வலம் வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகள் இந்தியாவில் எந்தப்பகுதியிலும் மக்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் ஆளும் வர்க்க சேவகர்களாக செயல்படும் மாவோயிஸ்டுகளை தத்துவார்த்த அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்து செல்வதே இன்றைய தேவையாகும்.

(ஆகஸட் மாத மார்க்சிஸ்ட் மாதஇதழ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது)

Monday, December 13, 2010

பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்

‘நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ ‘துப்பாக் கிக்குழலிலிருந்து புரட்சி வெடிக்கிறது’ ‘தெலுங்கானா போராட்டத்தின்போதே ஆயுதப் புரட்சிக்கு மக்கள் தயார்’ ‘நாடாளு மன்ற கம்யூனிஸ்ட்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ ‘நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற சகதிக்குள் சிக்கிக்கொண்டன’ என்றும் இதுபோன்று பலவுமாய் மாவோயிஸ்ட்டுகள் என்றழைக்கப்படுவோர் தங்கள் கட் சித்திட்டத்திலும் நாடாளுமன்றத்தை பயன்படுத்தும் கட்சிகளை திட்டவும் எழுதி வைத்துள்ளனர்.

நாடாளுமன்றமும் முதலாளித்துவமும்

முதலாளித்துவ உற்பத்தி முறையின் பல்வேறு மேற்கட்டுமானங்களில் நாடாளு மன்ற முறையும் ஒன்று. எனவே, முதலாளித் துவம் விரும்புகிறதோ இல்லையோ, முத லாளித்துவம் நீடிக்கும்வரை இந்த நாடாளு மன்றமுறை நீடிக்கும். அதற்குப் பின்னாலும் வெவ்வேறு நாடுகளின் சூழலுக்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் குணாம்சத்தில் வேறு பட்ட நாடாளுமன்ற முறை இருக்கவே செய் யும். எப்போதெல்லாம் முற்போக்கு சக்திகள் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைகின்ற னவோ, அப்போதெல்லாம் அதை முடக்கவும் அழிக்கவும் ஆளும் வர்க்கமோ அல்லது ஆளும் கட்சியோ முயன்றே வந்திருக்கிறது.“நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ, உழைக்கும் மக்களிடமி ருந்தோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது.” (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.23)

உழைக்கும் மக்கள் தங்கள் நலனை நாடா ளுமன்ற முறை மூலம் நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தால், சுரண்டும் வர்க்கங்கள் அவசர நிலை காலத்தில் செய்தது போல அதை முடக்குவார்கள் பாஜக முயற்சித்தது போல ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டு வந்து அதை செயலற்றதாக்க நினைப்பார்கள் 2008 ஜூலை 22-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந் தபோது செய்தது போல பணத்தைக்கொட்டி விலை பேசுவார்கள் சட்டமன்றங்களை நூறு முறைக்கு மேல் கலைத்து சிறுமைப்படுத்துவார்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கேலிக்கூத்தாக்குவார்கள்; அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகளில் நடந்து கொண்டது போல அதன் கருத்தை ஓரம் கட்டுவார்கள். ஆனால், நாடாளுமன்ற முறையை விட உயர்ந்த வடிவத்திற்கு மக்கள் போராடு வார்களோ என்ற அச்சத்தின் காரணமாய் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் புனிதம் குறித்து பக்கம் பக்கமாய் பேசுவார்கள். எனவே நாடாளுமன்ற ஜனநாயகமுறையை முதலா ளித்துவம் சகித்துக்கொள்கிறது. ஏனெனில் நாடாளுமன்றம் தனது மேற்கட்டுமானம். அதை அழிக்க முதலாளித்துவம் தன்னை அழித்துக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றமும் மார்க்சிஸ்ட்டுகளும்

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடி வமாக இருந்தாலும் மக்களின் முன்னேற் றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வ தற்கும் அரசு விவகாரங்களில் ஓரளவு தலை யிடுவதற்கும் ஜனநாயக மற்றும் சமூக வளர்ச் சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.”
(மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.22)

எனவே மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை யில் தலையிடுவதற்கும், போராடுவதற்கும் உள்ள சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நிர்ணயித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள்ளேயே அரசாங்கங் களை அமைக்க வாய்ப்பிருந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே திட்டம் வைத்திருக்கிறது. “திட்டவட்டமான சூழலை பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளை” கட்சி பயன் படுத்திக்கொள்ளும். அவை எப்படிப்பட்ட அரசாங்கம் “இப்போதுள்ள வரையறைக்குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நிறைவேற்று கிற அரசாங்கங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளும்”.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கிடைத்த அத்தகைய வாய்ப்பு களை மார்க்சிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது. நிலச்சீர்திருத்தத்தை அமல்ப டுத்தியது, அதிகாரப்பரவலை சாத்தியமாக்கி யது, பொதுவிநியோக முறையைப் பலப் படுத்தியது, கந்துவட்டி ஒழிப்புச் சட்டங் களை இயற்றி அமல்படுத்தி இருக்கிறது. தனியாரிடம் கடன்வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொண்டோரை மீட்டது, குத்தகைச் சட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டியது, குறைந்த பட்சக் கூலிச்சட்டத்தை அமல்படுத்தியது, உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படாதிருப் பது, இவையெல்லாம் வேறு எந்த மாநிலங் களிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான அரசின் சாதனைகள். இப்போது கூட கேரளாவில் தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது இத்தகைய வகையிலானதே. ஒரு நிறு வனத்தில் - சிறப்பு பொருளாதார மண்டலத் தில் இருப்பவை உள்பட ஒரு சங்கம் இருந் தால் அதை அங்கீகரிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற் பட்ட சங்கங்கள் இருந்தால் ரகசிய வாக் கெடுப்பு மூலம் அங்கீகாரம் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேற்கு வங்க அரசும் இத்தகைய சட்டத்தை இயற்றி யுள்ளது. மூன்று மாநிலங்களிலும் ஆட்சியி லிருந்த அனுபவங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியே என்பதை நிரூபித்திருக்கிறது. இத்தகைய அரசாங்கங்களில் பங்கு கொள்வ தால் சில நிவாரணங்களை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அதன்மூலம் “மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணிக்கு உதவும்” என்கிற நோக்கத்திலிருந்து தான் இந்த அரசாங்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கெடுக்கிறது.

முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குட்பட்டு பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறோம். பொதுத் துறை பாதுகாப்பு, தகவலறியும் உரிமைச் சட் டம், கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட் டம், அயல்துறை கொள்கையில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகிற முற்போக்கு அம்சங்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டை காப் பாற்றிக்கொண்டிருப்பது, இந்திய அரசின் ஏகாதிபத்திய சார்பை கட்டுக்குள் வைத்திருப் பது, இரண்டாவது லேபர் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட வைத்திருப்பது, என்று அடுக்க முடியும். சுருக்கமாகச் சொல் வதெனில், கடந்த நாடாளுமன்றத்தில் இடது சாரிகளைச் சார்ந்திருந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்கும் இடதுசாரிகளின் ஆதரவு வேண்டியிராத இந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்குமான வேறுபாடே இதை உணர்த்தும். “இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போதே இப்போதுள்ள பெருமுத லாளிகள் தலைமையிலான முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத் தும்”. நாடாளுமன்றத்தில் பங்குகொள்வது பற் றிய மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுவே.

கட்சித்திட்டம் மேலும் கூறுகிறது “நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும்… அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடு படும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர முன்வரமாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறது. எனவே, நாடாளுமன்ற முறை புனிதமென்றோ, சாசுவத மென்றோ, சர்வரோக நிவாரணி என்றோ மார்க் சிஸ்ட் கட்சி கருதவில்லை. அதைப் பயன் படுத்திடவும் அம்பலப்படுத்திடவும் மக்க ளைத் தயார்ப்படுத்தவுமே நாடாளுமன்றத்தில் பங்குகொள்கிறது. லெனின் கூறுகிறார் “முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் இதர பிற் போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற் றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற் றில் நீங்கள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலைசெய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்” (தேர்வு நூல் தொகுதி 10-பக்கம் 247)

நாடாளுமன்றமும் மாவோயிஸ்ட்டுகளும்

நாடாளுமன்றத்தை மக்கள் போராட்டங் களுக்காகப் பயன்படுத்துவதும் அதை அம் பலப்படுத்துவதும் நோக்கமாகக்கொண்டு போனவர்கள் அந்தச் சகதியில் மூழ்கிவிட்ட தாகக் மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போன தாகவும் தரகு முதலாளித்துவ அரசு அதை பாதுகாப்பதாகவும் முடிவுக்கு வருகிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் வர்க் கத்தன்மை பற்றி குறிப்பிடுகிற போது இது தரகு முதலாளித்துவ அதிகார வர்க்க முதலா ளித்துவ- பெருநிலப்பிரபுத்துவ அரசு என்று வரையறுக்கிறார்கள். தரகு முதலாளிகள் யார்? தன் நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட் களை ஏற்றுமதி செய்து உற்பத்தி பொருட் களை இறக்குமதி செய்து லாபமீட்டும் ஏஜெண் டுகளாக செயல்படுபவர்கள். அவர்களுக்கு நாடாளுமன்ற முறை தேவையும் இல்லை. அதை பாதுகாக்கவும் மாட்டார்கள். எனவே தான் இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறித்த தவறான நிர்ணயிப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பயன்படுத்துவது குறித்த புரிதலிலும் தவறான முடிவெடுக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. இப்படி ஒவ் வொரு அம்சத்திலும் அவர்கள் தவறு செய் கிறார்கள்.

நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போனதாய் சொல்கிறார்கள். இந்த அல்லது அந்தக்கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது வேறு. நாடாளுமன்றத்தையே புறக் கணிக்கிறார்கள் என்பது வேறு. மாவோயிஸ்ட் டுகள் நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிக்க அறைகூவல் விட்டனர். அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளிலேயே மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாவோயிஸ்ட்டுக ளின் அறைகூவலைத்தானே புறக்கணித்த னர். மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை உச் சத்திலிருந்த இந்தக்காலத்தில்தான் ஜார் கண்ட் மாநில தேர்தல் நடைபெற்றது. மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டு விட்ட தாக மாவோயிஸ்ட்டுகள் சொல்வது அவர் களின் விருப்பமே தவிர, யதார்த்தமல்ல.

நாடாளுமன்றம் குறித்து லெனின்

சீனாவில் புரட்சிக்கு முன்னர் நாடாளுமன்ற முறை இருந்ததில்லை. ஆனால் ரஷ்யாவில் நாடாளுமன்றமுறை இருந்தது. “இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறுஎன்ற நூலில் நாடாளுமன்றத்தில் பங்கேற் பது குறித்தும் அதற்கெதிரான நிலைபாட்டை விமர்சித்தும் நிறைய எழுதியிருக்கிறார் தோழர் லெனின். “மிகவும் பிற்போக்கான நாடாளு மன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் பங்கெடுத்துக்கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்குகள் மிக உக்கிரமாகப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப்பகுதியை சிதையாது பாது காத்துக்கொள்ளக்கூட முடியாமற்போயிருக்கும் என்று மிகத்தெளிவாய் தெரிகிறது” (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 10 - பக்கம் - 208)

“போல்ஷ்விக்குகளான நாங்கள் படு மோசமான எதிர்ப்புரட்சி நாடாளுமன்றங் களில் பங்கெடுத்துக்கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது... பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கு (அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப்பாட்டாளி வர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன்கூட அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தெளிவுபடுத்தியிருக்கிறது” (மேற் சொன்ன நூல் பக்கம் 251)

“சோவியத் புரட்சிக்கு சிறிது காலமே முன்னதாய் 1917 செப்டம்பரில் போல்ஷ்விக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்கு (அரசியல் நிர்ணய சபைக்கு) தமது வேட்பாளர்களை நிறுத்தினர். 1917 நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுதினம் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்குகொண்டனர். 1918 ஜனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் என்பது போல்ஷ் விக்குகளுக்குத் தடங்கலாகி விடவில்லை. மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது”. (மேற்கண்ட நூல் பக்கம் - 298)

ரஷ்யாவில் சோசலிச புரட்சி நடைபெறு வதற்கு சில நாட்களுக்கு முன்பும் சோசலிச புரட்சி நடந்து முடிந்த தருவாயிலும் நாடாளு மன்றத்தில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்ற அனுபவத்தை லெனின் இங்கு குறிப்பிடு கிறார். ஆனால், சோசலிச புரட்சிக்கு முந் தைய புதிய ஜனநாயகத்திற்காக போராடுகிற போது அதில் பங்கேற்பதை மாவோயிஸ்ட்டு கள் ஏற்க மறுக்கின்றனர். பாட்டாளி வர்க் கப்புரட்சியை நடத்தி வெற்றி கண்ட நாட்டின் அனுபவத்தை மாவோயிஸ்ட்டுகள் கணக் கில் கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் பன்றிகளின் தொழுவம் என்கிற மனப்படி மத்தை மீற அவர்களால் முடியவில்லை. தோழர் லெனின் ‘இடதுசாரி’ கம்யூனிஸ்ட் டுகளைப் பற்றிக் கூறுவது போல அவர்கள் தங்கள் நிழலை விட்டு ஓடிவிட எத்தனிக் கிறார்கள். முட்டாள்களின் சொர்க்கத்தைக் கனவு காண்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகளின் இத்தகைய பிரச்சாரங்களை முற்றிலும் பிழையான, மார்க்சியத்திற்கும் இயக்கவியலுக்கும் எதிரான கருத்துக்களை, முனைப்புடன் போராடி முறியடிக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலையற்றதும் வறட்டுத்தனமானதும், மனச்சோர்விற்கு ஆட்படுவதுமான குட்டி முதலாளித்துவ நிலையை கம்யூனிஸ்ட் இயக்கம் கண்டு வந்திருக்கிறது. “முதலாளித்துவத்தில் கொடுமைகளால் குட்டி முதலாளித் துவப்பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத் தள்ளிவிடப்படுவதானது அரா ஜகவாதத்தைப் போலவே முதலாளித்துவ நாடுகள் யாவற்றிற்கும் இயல்பாகவே உரித் தான ஒரு சமூக நிகழ்ச்சிப்போக்காகும்” (லெனின்) வலது திரிபு வாதத்தைப் போல இடது அதிதீவிரவாதமும் புரட்சிகர இயக்கத் திற்கு எதிரானது. அதற்கெதிரான போராட்டத் தை உறுதியுடனும் தொடர்ச்சியாகவும் வலு வுடனும் நடத்தாமல் புரட்சி இயக்கம் முன் னேற முடியாது.

-க. கனகராஜ்

Friday, December 10, 2010

"வினவுக்கு எதிர் வினா ?"



(மம்தா மாவோயிடுகள் சதியாலோசனை (இன்டியான் வான்கோர்ட்)

இந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில் தொடர்ந்து அறிவித்து வருகிறது "வினவு" என்ற வலைத்தளம். இந்த வினவு தங்களைத் தாங்களே ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற "அக்மார்க் புரட்சியாளர்கள்" என்று முத்திரைக்குத்திக் கொள்பவர்களின் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.

இந்த வினவு புதிய ஜனநாயகம் இதழிலிருந்து ஒரு கட்டுரையை பிரசுரம் செய்துள்ளது. ஆக்கபூர்வமான எந்த மாற்றையும் எப்போதுமே சொல்லாத, எல்லோரையும் கண்டபடி திட்டினால் பிரபலமாகலாம் என்ற துக்ளக் பாணி அரசியல் செய்துவருகிறது வினவு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் பேருந்தில் புலம்பிக்கொண்டே செல்லும் பயணி போல இணையத்தில் புரட்சி வரும் என காத்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்களின் கூடாரமாய் காட்சியளிக்கிறது.

எல்லோரும் அய்யோக்கியன், நான் மட்டும் நல்லவன் என்று புலம்புவதையும்
அரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் என்று வார்த்தைகளை பொறுக்கி கதையடிப்பதையும் செய்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக "கோயபல்ஸ்" பாணியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளது அந்த வலைத்தளம். இதற்கு நல்ல உதாரணம் மேற்கண்ட கட்டுரை "ஹர்மத் வாஹினி சி.பி.எம் இன் குண்டர் படை" இந்த கட்டுரையில் எத்துனை பொய்கள் என பார்க்கலாம்...

//”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது."//

இதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. "ஹர்மத் வாஹினி" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல..... அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர். அடுத்த பாரா கீழே வருகிறது....

// "கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில்
பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது."//

சி.பி.எம் ஊழல் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட சொல்லத் துணியாத ஒரு பொய்யை கட்டமைத்து அதற்கு பழங்குடியின மக்களின் பேரெழுச்சி என முலாம் பூசி இருக்கின்றனர். ஆனால் நடந்ததை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பதுதான் அது. மம்தாயிஸ்டுககளான மாவோயிஸ்டுகளின் நோக்கம் அதுதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும் ஒரு மக்கள் ஆட்சியை வீழ்ந்த அரசியல் ரீதியாக முடியாது என்ற காரணத்தினால் கொலைபாதக வழியை பின்பற்றுகின்றனர். இது கூட அவர்களது சொந்த புத்தி கிடையாது. 1977 ஆம் ஆண்டு சித்தார்த் சங்கர் ரே என்ற காங்கிரஸ் தலைவர் பயன்படுத்தியதுதான். அதன் விளைவை கங்கிரஸ்காரர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனிமேல்...

இந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலங்களை பங்கிட்டு கொடுத்த மேற்குவங்க அரசு தொழில்துறையில் தோல்வி அடைந்து விட்டதாக மம்தாவும் காங்கிரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். தொழிற்துறையில் அந்த அரசு செய்த சாதனைகளை மறைத்துவிட்டனர்.

மேலும் தொழிற்சாலைகளை துவக்க நிலங்கள் தேவைப்பட்டது. அதற்குதான் சிங்கூர், நந்திகிராம், லால்கர் ஆகிய பகுதிகளில் மக்கள் ஒப்புதலுடன் நிலங்கள் எடுக்கப்பட்டது. ஆனால் மம்தா - மாவோயிஸ்ட் - முதலாளித்துவ ஊடகங்கள் கூட்டணி அமைத்து தொழிற்சாலை அமைக்க அரசாங்கமே நிலங்களை பிடுங்க வருவதாக பொய் பிரச்சாரத்தை செய்தன. நம்பிய அப்பாவி மக்களை ரட்சிக்க வருவதாக ரவுடிகளையும், கொலைகாரர்களையும் திரட்டி, அவர்கள் கையில் செங்கொடியையும் ஆயுதத்தையும் கொடுத்து மம்தா கலவரத்தை தூண்டினார். அங்கிருந்த ஓரிரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த கலவரத்திற்கு வர்க்க சாயம் பூசினார்கள். மாவோவின் தத்துவங்களை வலைத்து திரித்து தத்துவ விளக்கம் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யாப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மாதங்கள் மம்தாவின் கட்டளையை ஏற்று மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை, மாநில அரசு மாவோயிஸ்டுகளை பேச அழைத்துக்கொண்டு இருந்ததால் ஆயுதம் ஏந்தவில்லை. இதன் விளைவு சி.பி.எம் கட்சியின் 350 ஊழியர்கள் கொள்ளப்பட்டனர். "போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி" என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பழி போட்டு மாம்தாயிஸ்டுகள் ஆடிய கொலைதாண்டவத்திற்கு பதிலடி கிடைக்க துவங்கியதும் அது அரசு பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இப்போது போக்கிடம் இல்லாமல் அலைவதை மம்தாவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆயுத பலத்தை வைத்து சில இடங்களை வெற்றி பெற்றார். அவர்கள் இல்லாமல் இனி வெற்றி என்பது சாத்தியமில்லை.

"சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது"

என்று இக்கட்டுரை முலமாக மம்தாவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது வினவு வலைதளம். உண்மையை உணர்ந்த பழங்குடி மக்கள் பேரெழுச்சியால் கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் சி.பி.எம். தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, மம்தா மற்றும் மாவோயிஸ்ட் கட்சியின் குண்டர்படைத் தலைவர்கள் கொலுத்திய அலுவலகங்கள் அவை தற்போது மாவோயிஸ்டுகளால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்தனர். இதை கூட வினவு திரித்து எழுதி அற்பசந்தோஷமடைகிறது.

மாவோயிஸ்டுகளுக்கும் ( பாவம் மாவோ ) வினவுக்கும் மிகவும் பிடித்த மம்தவை தொடர்ந்து புகழ்ந்தால் என்னவாகும்? அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா? எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் " சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம்!? ஆஹா என்ன அருமை? மம்தாயிஸ்டுகள் மக்களிடம் அடிவாங்க முடியாமல் விட்டுவிட்டு ஓடிப்போன கிராமங்களுக்குப் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வெடிகுண்டுகளுடன் நுழையும் மாவோயிடுகள் பிடிக்கப்பட்டு மக்களால் நையபுடைக்கப்படுவதை வெறு வழி இல்லாமல் உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் மாவோயிஸ்டு குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் சி.பி.எம். கட்சியை சார்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தினர். தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வன்முறையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என எழுதியும் வருகின்றனர். ஆனால் மேற்குவங்க அரசு மாவோயிஸ்டுகளை பழிவாங்க துடிக்காமல், திசைத்தவரிய அவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திட்டமிடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதற்கு தொடர்ந்து வினவு போன்ற வலைதளங்களும், பு.ஜ போன்ற பத்திரிக்கைகளும் முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் தாண்டி பணியாற்றுகின்றன.

அதுவும் மேற்குவங்க உளவுத்துறையின் அறிக்கையை, ப.சிதம்பரத்தின் கடிதத்தை யெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுகின்றனர். எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் மாவோயிஸ்டுகள் என்கிற மம்தாயிஸ்டுகள் கையில் பயங்கர ஆயுதம் இருந்தால் அது புரட்சியின் எழுச்சி மார்க்சிஸ்டுகள் கையில் தடி இருந்தால் அது சமூக பாசிசமாம்! எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம்.

இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா?

அவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் வரட்டு தத்துவத்தின் பிடியில் இருப்பதால் உழைப்பாளி மக்களை கொல்கிறது, கொள்ளையடிக்கிறது. இந்த உண்மை தெரிந்தும் மார்க்சிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக நமது தமிழக ஐ.எஸ்.ஐ புரட்சியாளர்கள் மாறிவருவது வருத்தத்திற்கு உரியது.

தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வந்த கோயபல்ஸ் என்ன ஆனான் என்பதை உலகம் அறியும் ஆனால் வினவு??

Wednesday, September 22, 2010

வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது

அலாஸ்காவில் இருந்து இரும்புத்திரையை மட்டும் இணையத்தில் படிப்பவர்கள் எதிர்வினை எழுதுவது தான் வேலை என்று யாராவது கூகுள் பஸ்,டிவிட்டர்,ஃபோரம்,ப்ளாக் போன்ற எதிலாவது எழுதி விட்டால் உடனே பிரபல பஸ்ஸர் யாராவது லைக்குவார்கள்.பிரபல பஸ்ஸர் என்று சொன்னது பகடியாக இருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக இருந்தாலும் அதை உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டும்.சிரித்து விடக்கூடாது.


முதலில் ஒரு ஜூலை மாதம் இன்னொரு பிரபலத்துக்கு பெருங்காயம் ஏற்படுத்தினாலும் அட சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதே லேசாக ஆதரவு குரல் கொடுத்து தொலைத்தது தான் வினையாகி போய் விட்டது. தேவையாடா உனக்கு இது. லேசாக காலை தட்டி விட்டதற்கே பிரபலத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.குழிக்குள் விழுந்திருந்தால் மண்ணைப் போட்ட வரும் கூட்டத்தை நினைத்ததும் மனசு மகிழ்ச்சியில் பொங்கி விட்டது.

புரட்சியை எல்லாம் பார்த்தால் அவர்கள் தான் பெரியவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.காரணம் அவர்கள் வீச்சு அப்படி.அவர்களை யாராவது எதிர்த்து கருத்து சொன்னாலே போது தோழர்கள் டிவிட்டர், பஸ், ப்ளாக் என்று பாய்ந்து வருவார்கள். வழக்கம் போல அடுத்தவர் இடம் என்றால் அடியை வாங்கி கொண்டு போவார்கள்.அவர்கள் இடமாகயிருந்தாலும் தைரியமாக வருவார்களா என்றால் அதுவும் கிடையாது.முக்கால்வாசி மூடிக் கொண்டு தான் வருவார்கள்.வந்து இவர்களுடைய அல்லக்கை பட்டத்தை கோவி.கண்ணன்,பாலபாரதி (எவ்வளவு உனக்கு பட்டாலும் புத்தி வராது.இப்படி ஆதரவு கொடு உனக்கு அவங்க ஷேர் கொடுப்பாங்க என்று மனசாட்சி திட்டினாலும்) போன்றவர்களுக்கு கொடுத்து அவர்களுடைய பச்சோந்தி பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள்.எப்படி வேணாலும் இருங்கள். அவர்களுடன் சேர்ந்து விட்டால் யாரோ தப்பாக சொன்னார்கள்.அப்போது புரிதல் இல்லை இப்படி ஏதாவது சொல்லி சேர்த்து கொள்வார்கள். நானும் புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து கொள்ளுங்கள்.

இணையத்தில் இவர்கள் ஒரே ஆள் வெவ்வேறு ஐடியில் வருகிறார்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு பொங்கினால் எப்படி. அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தோழர் ஏழரையைத் தவிர யாரும் வினவைத் தாண்டி வர மாட்டார்கள். ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனத்திற்கு மட்டும் எல்லாருடைய ப்ளாக்கிலும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து எங்கு விமர்சனம் செய்ய மட்டும் செய்ய தெரியும்.விதவிதமான பெயர்களில்.அப்புறம் மார்க்ஸ் ஏன் சொல்ல மாட்டார்.

ராஜீவ் கொலை நடந்த சமயம் தி.மு.கவை இவர்கள் தான் காப்பாற்றினார்கள். அப்புறம் கலைஞர் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க இவர்கள் நடத்திய பிரச்சாரம் தான் காரணம்.அதற்கு கைமாறாகத்தான் முதல்வர் இவர்கள் என்ன திட்டினாலும் கைது செய்யவேயில்லையாம்.சவுக்கு அளவிற்கு பிரபலம் இல்லை என்பது தான் உண்மை.

//எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.//

இதை விட காமெடி கிடையவே கிடையாது.ஆமாம் வீட்டுக்கு ஆள் அனுப்புவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். இணையத்தில் எதிர்கருத்து வந்தாலே பொறுக்க முடியாது. ஒரு பஸ்ஸிற்கு இத்தனை பொங்கினால் இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்.

ஆனால் இவர்கள் கையில் அதிகாரம் முழுமையாக இருந்தால் தோழர்களாலே ப்ளாக் எழுத முடியாது.இருந்தால் தானே எழுத.மேலும் கருணானிதியின் தலையை எடுப்போம் என்று சொன்னதற்கு திமுக தொண்டர்கள் ஆவேசப்படவில்லையாம். அப்படி எதுவும் நடக்காது என்று தெரியும்.ஏன் ஆவேசப்பட வேண்டும்.காமெடி பண்ணுங்க ஒரு அளவா பண்ணுங்க.

வினவு பதிவுககில் பிரபலம் என்பது உண்மை தான்.ம.க.இ.க கட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்று தான் தெரியும்.தேர்தல் ஆணையத்திற்கு என்று தெரிந்து அந்த கட்சியின் அந்தஸ்தைப் பிடுங்கி அதற்கு அங்கீகாரம் தருவார்களோ அன்று ஒத்துக் கொள்கிறேன் ம.க.இ.க கட்சி தான் பெரிய கட்சி என்று.மிளகாய் தான் பெரிசு என்றும் ஒத்துக் கொள்கிறேன்.

Thursday, September 2, 2010

மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்

மத்தியப் படைகள் தாக்குதலால் கடுமை யான சேதத்தை சந்தித்ததாலும் உள்ளூர் மக் களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்ப தாலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கம், மேற்குவங்கத்தின் பஸ்சிம் மேதினிப்பூர், புருலியா மற்றும் பன்குரா மாவட்டங்களை சேர்ந்த ஜங்கல்மஹால் பகுதியில் தங்களின் செல்வாக்கை இழந்து வருவதாக தோன்றுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப்பகுதியில் மாவோ யிஸ்டுகள் செலுத்தி வந்த மிரட்டல் ராஜ்யம் தற்போது வலுவாக எதிர்கொள்ளப்படுகிறது. இந்தமுறை தாங்கள் யாருக்காக போராடிக் கொண்டிருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறுகி றார்களோ அந்த உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் சவாலை சந்திக்கிறார்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோ யிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்குகிற “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழுவும் (ஞஊஞஐ) ஒவ்வொரு நாளும் கொலை, வழிப்பறி, பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடு பட்டு வந்தனர். மக்கள் இவற்றையெல்லாம் அமைதியாக தாங்கிக்கொண்டார்கள். இல் லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்லியும் போலீஸ் உளவாளி என்று சொல்லியும் மாவோயிஸ்டுகள் இவர்களை சுட்டுக்கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்துவ தற்கு இதைத்தான் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

மறக்க முடியாத ஜூலை 22

ஆனால், ஜூலை 22-ம் தேதியை அவர்கள் மறக்கமுடியாத அளவிற்கு மக்கள் செய்து விட்டார்கள். பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள ஜார்க்ரம் என்கிற நகரத்தின் அருகிலுள்ள ராதாநகர் கிராமத்தில் உள்ள மக்கள் அன்றையதினம்தான் தைரியமாக அவர்களை எதிர்த்து நின்றதோடு அவர்களு டைய கட்டளைகளையும் ஏற்க மறுத்துவிட் டனர். சுமார் 20 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்கும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழுவும்” அந்த கிராமத்தில் பள்ளிக் கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் கூடினார்கள். தாங்கள் நடத்துகிற பேரணியில் கிராம மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது அவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. மக்கள் பேரணியில் பங்கு கொள்ள மறுத்தபோது அவர்கள் தங்கள் கையி லிருந்த துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை காட்டி பயமுறுத்த ஆரம்பித்தனர். ஆனால், மக் கள் பேரணியில் பங்கேற்க உறுதியாக மறுத் ததோடு அவர்களை விரட்டியும் அடித்து விட்டார்கள்.

ஜார்க்ரம் மாவட்டத்தின் காவல்துறை கண் காணிப்பாளர் பிரவின் திருபாதி ஃப்ரண்ட் லைன் நிருபரோடு பேசுகிறபோது “இப்போது மக்கள் மாவோயிஸ்டுகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுவதால் வெறுத் துப்போய் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் காவல்துறையும், மத்தியபடையும் மாவோயிஸ் டுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மக்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி யிருக்கிறது. அவர்கள் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராட துணிந்திருக்கிறார்கள். மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

எதிர்ப்புப் பேரணி

ராதாநகர் சம்பவம் அந்தப்பகுதியை சுற்றி யுள்ள கிராமங்களில் உள்ள மக்களை உத் வேகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள் ஜூலை 23-ம் தேதி ராதாநகரில் ஒரு பெரும் பேரணி நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் இந்த பயமுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராகவும் அதைக்கண்டித்தும் நடத்தப்பட்ட பேரணி இது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். இவர்கள் ராதாநக ரைச்சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அதன் அருகி லுள்ள கைஹட்டா மற்றும் பச்சூர்தோபா ஆகிய கிராமங்களைச் சார்ந்தவர்களும் அந்தப்பேரணியில் கலந்துகொண்டார்கள். ஜார்க்ரம் நகரம் மற்றும் அதன் காவல்நிலைய எல்லைக்கு மிக தூரத்திலுள்ள மக்களும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ராதாநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குழு” ஜார்க்ரமி லிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிஸ்சிந்தா கிராமத்திலும் இதேபோன்ற எதிர்ப் பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ஜூலை 24-ந்தேதி இரவு இவர்கள் அந்த கிராமத்திற்கு வந்து பேரணியில் பங்கெடுக்க வேண்டுமென்று மக்களை வழக்கம் போல் கட்டாயப்படுத்தி பயமுறுத்தியிருக்கிறார்கள். மக்கள் இதற்கு செவிமடுக்க மறுத்ததோடு அவர்களில் ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டனர். அடுத்த நாள் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஜங்கல் மஹால் பகுதியில் உள்ள மக்கள், கிராமத்தை காப்பாற்றும் கமிட்டிகள் அமைத்து ஒன்றுபட்டு மாவோயிஸ்டுகளை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ராதாநகரில் ஜூலை 22-ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அடுத்த 10 நாட்களில் அந்தப்பகுதியிலுள்ள 52 கிராமங்களில் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாண்டிகரண் என்பவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அவர் லால்கர் ஒன்றியத்திலுள்ள லட்சிப்ப+ர் கிராமத்திலுள்ள பள்ளியில் வேலை செய்கிறார். மாவோயிஸ்டு களுக்கு எதிராக உள்ளூர் மக்களை திரட்டிய தில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அவர் ஃப்ரண்ட்லைன் நிருபரிடம் கீழ்க்கண் டவாறு கூறுகிறார். “இந்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அரசி யல் வேறுபாடுகள் இந்த ஒற்றுமைக்கு தடை யாக இல்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இனிமேலும் ஏற்பதில்லை என்று கூட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்று மாவோயிஸ்டுகளின் அச்சுறுத் தலுக்கு பயப்படப்போவதில்லை என்றும் அறி வித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு கிராமம் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டால் பக்கத் திலுள்ள கிராமங்கள் அந்த மக்களின் உத விக்கு வந்துவிடுகிறது. சமீபத்தில் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு உறுப் பினர்கள் எங்கள் ஊருக்குள் நுழைந்து போஸ் டர்களை ஒட்டுவதற்கும் துண்டுப்பிரசுரங் களை தூவி விட்டு செல்வதற்கும் முயற்சித் தார்கள். ஆனால் மக்கள் அவர்களை விரட்டி யடித்து விட்டார்கள்”

மாவோயிஸ்டுகள் மற்றும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு” தாங் கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டெடுப் பதற்காக சில பகுதிகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராம மக்களை போஸ்டர்கள் மூலமாக வும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தங்களு டன் சேரவில்லையென்றால் கொலை செய்து விடுவோமென்று மிரட்டியுள்ளனர். ஆனால், மக்கள் உறுதியாக நின்று முறியடித்துவிட் டனர். பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று அந்த கிரா மத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது காவல் துறையினரிடம் சரணடைந்துவிட வேண்டுமென்று எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 1ந்தேதியன்று நாராயண்ப+ர் கிராமத்தைச்சார்ந்த மக்கள் அந்த கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை கிழித்து மொத்தமாக தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

மாவோயிஸ்டு தலைவர் கொல்லப்பட்டார்

மாவோயிஸ்டுகள் போலீசுடனான சண் டையில் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறார்கள். ஜூலை 26-ந்தேதியன்று இந்த பகுதியைச்சார்ந்த மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் முக்கியமானவரான சிதுசோ ரன் மற்றும் 5 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் மேட்டானா காடுகளில் கொல்லப்பட்டனர். இது லால்கரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “சிதுசோர னுடைய மரணத்திற்குப்பிறகு உள்ளூர் மக்களி டமிருந்து ஏராளமான விவரங்களை எங்களால் பெறமுடிகிறது. முன்னர் அவர்கள் எங்களோடு பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். தற்போது அவர்கள் தானாகவே முன்வந்து எங்களுடன் பேசுகிறார்கள்”

தளங்களை இழக்கிறார்கள்

பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதியின் காடுகளில் தங்கள் வலு வான தளங்களை இழந்திருப்பதோடு, ஒப்பீட் டளவில் புதிய பகுதிகளிலும் கூட மாவோ யிஸ்டுகள் இழப்பை சந்;தித்து வருவதாக தெரிகிறது. “முன்னர் மாவோயிஸ்டுகள் வலு வான தளத்திலிருந்து அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு தங்களுடைய தளத்தை விரிவு படுத்துவார்கள். தற்போது இவையனைத்தும் எதிர் திசையில் நடைபெறுகிறது. அவர்கள் அப்படி விரிவுபடுத்தப்பட்ட பகுதியிலிருந்து தங்கள் தளங்களை நோக்கி சென்றுகொண்டி ருக்கிறார்கள்” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் வர்மா தெரிவிக் கிறார். மாவோயிஸ்டுகளின் ஒரு பகுதி ஒரிசா எல்லையிலுள்ள நயாக்ராம் மற்றும் கோபிபல் லபூர் பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

“இவையெல்லாம் அவர்கள் செயல்பாட் டிற்கு ஒப்பீட்டளவில் புதிய பகுதிகள். இந்தப் பகுதிகளில் அவர்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதியிலும் மக்கள் மாவோயிஸ்டுகளின் மீதான பயத்தை போக்கிவிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போராட வந்திருக்கிறார்கள்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப் போதெல்லாம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் தங்களுக்கு கூடுதலாக உதவிசெய்ய வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டு களின் ஊழியர்களை நெருங்கி வருவதும் மக்களிடம் மாவோயிஸ்டு எதிர்ப்பு தீவிரப் பட்டு வருவதும் இந்தப்பகுதியில் தற்போ தைக்கு மாவோயிஸ்டு இயக்கம் மறைந்து வருவதையே குறிக்கிறது. மாவோயிஸ்டு களில் பலர் குறிப்பாக புதிதாக சேர்ந்தவர்கள் அந்த இயக்கத்தை விட்டு விலகவே விரும் புகிறார்கள்.

நன்றி : ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14 - 27

தமிழில்: க. கனகராஜ்

Saturday, August 21, 2010

திரிணாமுல்-மாவோயிஸ்ட் கள்ள உறவு

திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் கூட்டணியால் லால்கரில் சென்ற ஆகஸ்ட் 9 அன்று நடத்தப்பட்ட பேரணி மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே யுள்ள கள்ள உறவு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மை யில் இவ்விரு கட்சிகளும் மேற்கு வங் கத்தின் பல பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு கூட்டுச் சதிகாரர்கள் ஆவார்கள். இக்கூட்டணி யினரின் கொலைபாதகத் தாக்குதல்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 255 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுரண் டப்படும் வர்க்கத்திலேயே மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளும் மற்றும் பழங்குடியினரும் ஆவார்கள். இவர்களின் நலன்களைக் காப்பதற்காகத்தான் போராட்டங்களில் ஈடுபடுவதாக மாவோ யிஸ்ட்டுகள் கூறிக் கொண்டிருக்கிறார் கள். இவ்வாறு கூறப்படுவதை சில ‘அறிவுஜீவிகளும்’ ‘சமூக ஆர்வலர் களும்’ இன்னமும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியே மாவோயிஸ்ட் டுகளுடன் இப்படி வெளிப்படையாக அரசியல் கூட்டு வைத்திருப்பது மெய்ப் பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்மோகன் சிங் அரசாங்கம் அதனை மூடி மறைத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளில் பரிதா பகரமான முறையில் தோல்வியடைந்து விட்டது. லால்கர் கூட்டம் தொடர்பாக “உண்மை விவரங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டபின்” நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அது குறித்துத் தெரிவிப்பதாகக் கூறி அரசு தற்சமயம் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஆகஸ்ட் 11 அன்று, மாநிலங்களவையில், ரயில் விபத் துக்களில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப் பட்டிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட, நட்சத்திரக்குறியிட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில், மத்திய உள்துறை இணை அமைச்சர், ‘‘ இதுவரை மேற் கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து, மாவோயிஸ்ட்டுகளின் முன்னணி அமைப்பான பிஎஸ்பிஜேசி/பிசிபிஏ (ஞளுக்ஷதுஊ/ஞஊஞஹ) ரயில்வே தண்டவாளங்க ளைத் தகர்த்ததிலும், அவற்றின் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தியதிலும் சம் பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார். அரசின் நிலைப் பாட்டில் இருநாட்களுக்குள் என்னே முரண்பாடு!

ரயில்வேயில் பயணம் செய்யும் மக் களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்திடுவேன் என்றும் ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற் கொள்வேன் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள மத்திய ரயில்வே அமைச் சரே, மாவோயிஸ்ட்டுகளுடன் வெளிப் படையாகவே உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறார். மாவோயிஸ்ட் வன்முறைகளுக்கு எதிராக அரசு மேற் கொண்டு வரும் பாதுகாவலர்களின் நட வடிக்கைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப் படையாகவே கோரி வருகிறார். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒருபடி மேலேயே சென்று, மாவோயிஸ்ட் தலை வர் ஆசாத் அரசின் பாதுகாப்புப் படையி னர் கூறுவதுபோல் அவர்களுடன் நடை பெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட வில்லை என்றும் மாறாக அவர் “கொலை செய்யப்பட்டார்” என்றும் கூறக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் இடையேயான பிணைப்பு என்பது மிகவும் தெளிவாகவே மாறியிருக்கிறது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி களின்படி, மாவோயிஸ்ட் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கிஷன்ஜி என்னும் கோடேஸ்வர் ராவ் மீண்டும் ஒருமுறை ஆசாத் பிரச்சனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூற்றை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். “போலி என்கவுன்ட்டரில் எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் மத்தியக் குழுவின் சார்பில் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கிய சாரக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆந்திரப் பிரதேச காவல்துறை யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். மம்தா பானர்ஜி உண்மையைப் பேசியுள் ளார். இதற்குமேல் இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படக் காரணம் ஏதுமில்லை.’’ இவ்வாறு நாடா ளுமன்ற ஜனநாயகத்தை வெளிப்படை யாக நிராகரித்துள்ள, இந்திய அரசுக்கு எதிராக ‘மக்கள் யுத்தத்திற்கு’ அறை கூவல் விடுத்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் கூறியிருக்கிறார்.

தங்கள் அமைச்சரவையின் ஒரு முக் கிய அங்கமாகத் திகழும் ஒருவரது செயல் பாடுகளுக்கு வக்காலத்து வாங்க இய லாது, ஐ.மு.கூட்டணி-2 அரசானது தனது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மூல மாக மாநிலங்களவையில், “மாவோயிஸ் டுகளை எவரொருவரும் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு ஆதரிக்கும் எவரையும் அரசு நிச்சயமாக ஊக்குவிக்காது” என்று கூற வைத்திருக்கிறது. ஆயினும், ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமானது, இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டு களை வெளிப்படையாக ஆதரித்து வரும் திரிணாமுல் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்க முடியாமல், அதனை சகித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மிகவும் கேவலமான அரசியல் சந்தர்ப்பவாத நிலையை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.

மாவோயிஸ்ட் வன்முறை இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிரதமர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆயினும் அவரது அமைச்சரவையின் சகா ஒருவரே, வெளிப்படையாக மாவோ யிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு உடந் தையாக இருந்து வருகிறார் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குலைத்திடும் அவர் களுடைய நடவடிக்கைகளை நியாயப் படுத்தி வருகிறார். இத்தகைய ஐ.மு. கூட்டணி-2 அரசின் முன்னுக்குப்பின் முரணான நிலை குறித்து பலமுறை குறிப்பிட்டிருக் கிறோம்.

லால்கரில் நடைபெற்ற கூட்டத்திற் கான காரணங்கள் என்ன? இக்கூட்டத் திற்காகப் பெரும் பகுதி மக்கள் லால்க ருக்கு வெளியே இருந்து வாகனங்களின் மூலம் திரட்டப்பட்டவர்கள். அப்பகுதி மக் களில் பெரும்பகுதியினர் இக்கூட்டத் தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த னர் என்ற உண்மையானது, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மக்களிடமிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு வரு வது அதிகரித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அப்பகுதி மக்களை அச் சுறுத்திப் பணியவைப்பதற்காகவே இக் கூட்டம் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டது என்பது இப்போது துல்லியமாகத் தெரிய வந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற் காக, மிகமிகத் தரம் தாழ்ந்த நிலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சென்று கொண்டி ருக்கிறது. அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும் என்பது குறித்தோ அல்லது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் அது கவலைப்படவில்லை. திரி ணாமுல் காங்கிரசின் இத்தகைய கேடு கெட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமோ அல்லது பிரத மரோ கண்டுகொள்ளாமல் இருந்தார்களா னால், பின் நாடே இதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவா தம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அனு மதிக்கப்படுவதன் மூலம், நாட்டின் ஒற் றுமையையும், ஒருமைப்பாட்டையும், உள் நாட்டுப் பாதுகாப்பையும் காவு கொடுத் திட அனுமதித்திட முடியாது. அறுபதுக ளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் முற் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சலைட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டங் களை அரசியல்ரீதியாக எதிர்த்து முறி யடித்து முன்னேறியது போல, இப்போது அதன் புதிய அவதாரமாக வந்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளை யும் எதிர்த்திடும்.

குறுகிய தேர்தல் ஆதாயங்கள் மற்றும் கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாத நிலைகளைவிட நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

தீக்கதிர்